ADDED : செப் 26, 2026 03:28 AM

- நமது நிருபர் -:
மரவள்ளிக்கிழங்கில் தேங்காய், நாட்டு சர்க்கரை சேர்த்து எளிமையான முறையில், அதிக சத்துகளுடைய மிட்டாய் செய்யலாம். இதை செய்வது சுலபம். நீண்ட நேரம் ஆகாது. அதிக பொருட்களும் தேவைப்படாது.
தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு 1 (பெரியது)
நாட்டு சர்க்கரை தேவையான அளவு
தேங்காய் துருவல் 1/4 கப்
ஏலக்காய் துாள் 1/2 டீஸ்பூன்
செய்முறை முதலில், மரவள்ளிக்கிழங்கில் தோலை நீக்கவும். பின், கிழங்கை நன்கு கழுவவும். கிழங்கை கேரட் துருவுவது போல, நைசாக துருவி எடுத்து கொள்ளவும். துருவிய கிழங்கை வெள்ளை துணியில் வைத்து, கிழங்கில் உள்ள சாறு போகும்படி பிழிந்து எடுத்து கொள்ளவும்.
பின், சக்கை போன்ற நிலையில் இருக்கும் கிழங்கை ஒரு வாணலியில் போடவும். இதில், துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் துாள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். இதை வாழை இலையில் வைத்து சுற்றிக்கொள்ளவும். இதை இட்லி பாதிரத்தில் வைத்து, 15 நிமிடங்கள் வேக வைக்கவும். பின், அடுப்பை அணைத்துவிட்டு மிட்டாயை எடுக்கவும். அவ்வளவு தான், சுவையான மரவள்ளிக்கிழங்கு மிட்டாய் தயார். இது, சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
