ADDED : நவ 22, 2025 05:01 AM

என்ன தான் நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், ரோட்டு கடை உணவின் ருசிக்கு ஈடாகாது. ரோட்டு கடை பிரைடு ரைஸ், நுாடுல்ஸ், பானி பூரி, சிக்கன் ரைஸ், கோபி ரைஸ் என, சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி, ரோட்டு கடையில் விற்கப்படும் கோபி ரைசை வீட்டிலே எப்படி செய்யலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
l இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன்
l காலிபிளவர் 1/4 கிலோ
l பெரிய வெங்காயம் 1
l கேரட் 1
l பீன்ஸ் 4
l கோஸ் 1 கப்
l குடை மிளகாய் 1
l சோயா சாஸ் 2 டீஸ்பூன்
l மிளகாய் சாஸ் 2 டீஸ்பூன்
l தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்
l எண்ணெய் தேவையான அளவு
l உப்பு தேவையான அளவு
l வடித்த சாதம் 1 கப்
l மிளகு துாள் 1 டீஸ்பூன்
எப்படி செய்வது?
முதலில் காலிபிளவரை நன்கு கழுவி, சுடுதண்ணீரில் போட்டு, லேசாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சூடான பின், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். இதில் சோயா, மிளகாய், தக்காளி சாஸை ஊற்றி வதக்கவும். இதை தொடர்ந்து, எண்ணெயில் பொரித்து வைத்த காலிபிளவரை போட்டு லேசாக வதக்கவும்.
இந்த கலவையில் வடித்த சாதம், 1 டீஸ்பூன் மிளகு துாள், உப்பு சேர்த்து லேசாக வதக்கி, வாணலியை அடுப்பில் இருந்து இறக்கவும். இதை தட்டுக்கு மாற்றவும். தக்காளி, சில்லி சாஸ் ஊற்றி சாப்பிட்டால் சுவை அசத்தலாக இருக்கும். அவ்வளவு தான் வீட்டிலேயே கோபி ரைஸ் ரெடி.
- நமது நிருபர் -:

