* பருப்பு வடை செய்யும் போது சிறிதளவு இஞ்சி துருவலை சேர்த்து செய்தால் வாயு பிரச்னை வராது. வடையின் சுவையும் கூடும்.
* காளான் வறுவல் செய்யும் போது தண்ணீர் ஊற்ற தேவையில்லை, காளானில் உள்ள தண்ணீரே வேக வைக்க போதுமான அளவு இருக்கும்.
* ரவா லட்டு செய்யும்போது சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொண்டால் வாசனையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு கூட்டு மீந்து விட்டால், அதை தோசையில் போட்டு மசாலா தோசையாக மாற்றி விடலாம்.
* மிளகாய் தூளில் வண்டு வராமல் இருக்க, சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கலாம்.
* வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொறியல் செய்யும்போது, அத்துடன் சிறிது முருங்கை கீரையும் சேர்த்து செய்தால், சுவையும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு பால் கறி செய்யும்போது முந்திரி பருப்பு அரைத்தால் சுவை அதிகரிக்கும்.
* குருமா கெட்டியாக வர வேண்டுமென்றால், உடைத்த கடலையை அரைத்து ஊற்ற வேண்டும்.
* மோரில் மிளகு, சீரகம் சேர்த்து பருகினால் சுவை நன்றாக இருக்கும்.
* புளி சாதம் செய்யும் போது நல்லெண்ணெய் பயன்படுத்தினால், அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்
- நமது நிருபர் -: .

