sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/அறுசுவை/ மொறுமொறு கேரட் 65!

 மொறுமொறு கேரட் 65!

 மொறுமொறு கேரட் 65!


ADDED : ஜூன் 06, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

சிக்கன் 65, கோபி மஞ்சூரியன், காளான் 65 என சாப்பிட்டிருப்போம். இந்த வரிசையில் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன், நாவிற்கு சுவையளிக்கும் கேரட் 65ஐ இந்த வாரம் வீட்டில் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

l கேரட் -- 100 கிராம்

l இஞ்சி பூண்டு விழுது --- சிறிதளவு

l உப்பு -- சிறிதளவு

l மஞ்சள் துாள் -- 1 தேக்கரண்டி

l மிளகாய் துாள் -- 1 தேக்கரண்டி

l கார்ன் ப்ளவர் --- சிறிதளவு

l அரிசி மாவு --- சிறிதளவு

l எலுமிச்சை சாறு --- ஒரு சிட்டிகை

l நறுக்கிய வெங்காயம் --- 1 கப்

l கறிவேப்பிலை --- சிறிதளவு

l வறுத்த கடலை பருப்பு --- சிறிதளவு

l சீரகம் --- 2 டேபிள் ஸ்பூன்

l மிளகாய் வத்தல் --- 5

செய்முறை

முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின், கேரட்டை நன்றாக கழுவிய பின், தோல் சீவி, வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய கேரட்டுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் துாள், 1 தேக்கரண்டி மிளகாய் துாள், இஞ்சி பூண்டு விழுது, கார்ன் ப்ளவர் மற்றும் அரிசி மாவு சிறிதளவு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

மசாலாக்கள் கேரட்டில் பிடிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, கலக்கவும்.

பின், மசாலா செய்வதற்கு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகாய் வத்தல் 5 மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட்டை பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின், மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து, சிறிது நேரம் வதக்கிக் கொண்டே, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்துக் கொள்ளவும். 5 நிமிடத்துக்கு பின், பொரித்து வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து நன்கு கிளறி விட்டால், சுவையான, கேரட் 65 தயார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us