sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/அறுசுவை/ எளிய முறையில் செய்யலாம் மரவள்ளி கிழங்கு புட்டு!  

 எளிய முறையில் செய்யலாம் மரவள்ளி கிழங்கு புட்டு!  

 எளிய முறையில் செய்யலாம் மரவள்ளி கிழங்கு புட்டு!  


ADDED : மே 23, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

வீட்டிலே எளிய முறையில், மரவள்ளி கிழங்கு புட்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மரவள்ளி கிழங்கு 1

துருவிய தேங்காய் 1 கப்

உப்பு தேவையான அளவு

சர்க்கரை தேவையான அளவு

ஏலக்காய் துாள் ½ டீஸ்பூன்

செய்முறை

முதலில் மரவள்ளி கிழங்கின் தோலை முழுமையாக நீக்க வேண்டும். பின், கேரட் துருவியால் கிழங்கை நைசாக துருவிக் கொள்ளவும். துருவிய கிழங்கை, காட்டன் துணியில் வைத்து பிழிந்து எடுக்க வேண்டும். இதன் மூலம், கிழங்கில் இருக்கும் ஈரப்பதம் வெளியேறும்.

துருவிய கிழங்கை இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் போட்டு, ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கிளறவும்.

இதனுடன் ஏலக்காய் துாள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும். மாவு புட்டு பதத்திற்கு வர வேண்டும். அவ்வளவு தான், மரவள்ளி கிழங்கு புட்டு தயார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us