sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ புளிப்பு ஆப்பிள் சட்னி!

 புளிப்பு ஆப்பிள் சட்னி!

 புளிப்பு ஆப்பிள் சட்னி!


ADDED : மே 23, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என, கூறுவர். அது உண்மை தான். ஆப்பிள் பழத்தில் பல விதமான புரத சத்துக்கள், மருத்துவ குணங்கள் உள்ளன. புளிப்பான ஆப்பிள் பழங்களில் இருந்து சுவையான சட்னி செய்யலாம்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 2 அல்லது 3

வெல்லம் - அரை கப்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

சோம்பு - அரை ஸ்பூன்

மிளகாய் துாள் - 1 ஸ்பூன்

சீரக துாள் - 1 ஸ்பூன்

உப்பு - சுவைக்கு தேவையான அளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

கருஞ்சீரகம் - அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் ஆப்பிள்களை கழுவி, மேற்புற தோலை நீக்கவும். உள்ளே இருக்கும் கொட்டைகளை அகற்றி, சதைப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். உங்களுக்கு சட்னி மிருதுவாக இருக்க வேண்டும் என்றால், துருவிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் சோம்பு, நறுக்கிய கொத்துமல்லி, புளிச்சாறை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையில் நறுமணம் வர துவங்கியதும், பொடியாக நறுக்கிய இஞ்சியை போட்டு, சில நிமிடங்கள் கிளறவும். அதன் பின், ஆப்பிள் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் நான்கைந்து நிமிடம் வேக வைக்கவும்.

ஆப்பிள் மிருதுவான பின், வெல்லம் சேர்க்கவும். வெல்லம் விரும்பாதோர் அதே அளவுக்கு சர்க்கரையை சேர்க்கலாம். நன்றாக கிளறவும். வெல்லம் பயன்படுத்துவதால், சட்னி மாறுபட்ட நிறம் மற்றும் சுவையுடன் இருக்கும். அதன்பின் மிளகாய் பொடி, சீரக பொடி, உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து மூடவும்.

சட்னி கெட்டியான பின், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சுவையான ஆப்பிள் சட்னி தயார். ஆறிய பின், இதனை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி, குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து கொண்டால், சில வாரங்கள் வரை பயன்படுத்தலாம். சப்பாத்தி, தோசை, பரோட்டா, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us