sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 மணக்கும் பீட்ரூட் பாயசம்

/

 மணக்கும் பீட்ரூட் பாயசம்

 மணக்கும் பீட்ரூட் பாயசம்

 மணக்கும் பீட்ரூட் பாயசம்


ADDED : ஏப் 04, 2026 04:43 AM

Google News

ADDED : ஏப் 04, 2026 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர்-: பாயசத்தில் பால், சேமியா என பல வகைகள் உண்டு. இருப்பினும், பல வீடுகளிலும் பால், பருப்பு, சேமியா என இந்த மூன்று வகை பாயசத்தை மட்டுமே செய்கின்றனர்.

இதற்கு மாற்றாக, ஒரு முறை பீட்ரூட் பாயசம் செய்து பாருங்கள். சுவை அருமையாக இருக்கும்.

மீண்டும், மீண்டும் செய்ய தோன்றும். வீட்டிற்கு யாரெனும் விருந்தினர் வரும் போது, பீட்ரூட் பாயாசம் செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் 1

பால் 1/2 லிட்டர்

சர்க்கரை தேவையான அளவு

நெய் 2 டீஸ்பூன்

ஏலக்காய் துாள் 1/2 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு வாணலியில் நெய் ஊற்றிக்கொள்ள வேண்டும். இதில், முந்திரி, திராட்சையை வறுத்து தனியே எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதே வாணலியில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை நெய்யில் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பீட்ரூட் நன்றாக வதங்கியதும், பால் ஊற்ற வேண்டும். பீட்ரூட் நன்கு வேகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பீட்ரூட் வெந்ததும், வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும். இறுதியாக, ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் பீட்ரூட் பாயசம் தயார். இதை செய்வது மிகவும் சுலபமாக இருந்தாலும், சுவை மிக அருமையாக இருக்கும்.

இந்த பாயசம் செய்யும் போது பீட்ரூட் வாசனையை குறைக்க விரும்பினால், சிறிதளவு வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us