ADDED : மார் 14, 2026 06:39 AM

- நமது நிருபர் -: கேரளாவில் பிரபலமான உணவு வகைகளில் ஆப்பிள் மோர் குழம்பும் ஒன்று. இதை செய்வது மிகவும் சுலபமானது. இந்த வாரம் செய்து பார்க்கலாம்.
செய்முறை ஆப்பிளின் தோலை சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கவும்
அடுப்பை சிறு தீயில் வைத்து, வாணலியில் நறுக்கிய ஆப்பிள், உப்பு, மஞ்சள் துாள், தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும்
சிறிய மிக்சி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் துாள், சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்
தயிரை பவுலில் எடுத்து, நன்கு ஸ்பூனால் உடைத்து கொள்ள வேண்டும்
வெந்த ஆப்பிளுடன் அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்
பின் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும்
அடுப்பை சிறு தீயில் வைத்து, வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலையை தாளிக்கவும். பின், இதனுடன் தாளித்ததை சேர்க்கவும்
பின் பவுலுக்கு மாற்றி, மேலே காய்ச்சாத தேங்காய் எண்ணெய் விடவும். இப்போது சுவையான, சுலபமான வித்தியாசமான ஆப்பிள் மோர் குழம்பு தயார்.

