ADDED : மார் 14, 2026 06:38 AM

- நமது நிருபர் - சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட, அனைவருக்கும் விருப்பம் இருக்கும். நம் வீட்டிலேயே தரமான உணவை குறுகிய நேரத்தில் தயாரிக்கலாம். பாலக் பூரி குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை முதலில், பாலக்கீரையை உப்பு கலந்த நீரில் நன்றாக கழுவவும். வாணலியில் நீருற்றி கீரையை போட்டு வேக வைக்கவும். வேகவைத்த கீரையில், சீரகம், பச்சை மிளகாய், கொத்துமல்லி சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
பாத்திரத்தில் பாலக்கீரை கலவையை போட்டு, அதில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் பிசைந்து வைத்த மாவை பூரிகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்தால், சுவையான பாலக் பூரி தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள, தக்காளி சட்னி அல்லது உருளைக்கிழங்கு மசியல் பொருத்தமாக இருக்கும். பாலக் பூரி தயாரிக்க அதிக நேரம் தேவைப்படாது.
குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர். காலையிலோ, மாலையிலோ சிற்றுண்டிக்கு தயாரிக்கலாம்.
