மருத்துவ கல்லுாரிகள் தரம் கருத்து தெரிவிக்க அழைப்பு

UPDATED : ஏப் 01, 2026 11:17 AM
ADDED : ஏப் 01, 2026 11:19 AM

அ நிறம் | அளவு
சென்னை:
நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், பேராசிரியர்களின் திறன், கல்வித்தரம் போன்றவற்றை அறிந்து கொள்ள, மாணவர்கள் இடையே தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., ஆய்வு நடத்துகிறது.
இது குறித்து, என்.எம்.சி., ஆணைய செயலர் ராகவ் லங்கர் வெளியிட்ட அறிவிப்பு:
ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், மருத்துவ கல்வி நிறுவனங்கள் குறித்து, இணையம் வழியே கருத்தறியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இளநிலை மருத்துவ மாணவர்கள் அனைவரும், ஆணையத்தின், https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் சென்று, தங்களின் கருத்துகள் மற்றும் தகவல்களை பதிவு செய்யலாம்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள் எதையும் தெரிவிக்க தேவையில்லை. மருத்துவ கல்லுாரிகளின் கல்வித் தரம், பேராசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களது பயிற்றுவிக்கும் திறன், செயல்முறை விளக்கங்கள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு போன்றவற்றை தெரிவிக்கலாம் .
அவை அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு, மருத்துவ கல்லுாரிகளை மதிப்பீடு செய்யும் போது, கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.