அரசு வாகனத்தையும், அரசு பங்களாவையும் பயன்படுத்த மாட்டேன்; எளிய வாழ்கையே வாழ்வேன் என்று சொல்லி முதல்வராக வந்த டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் அரசு இல்லத்தின் புனரமைப்பு செலவுகளுக்கு மட்டும் 59 கோடி ரூபாய் செலவிட்டார். பங்களா முன் வைக்கப்பட்டிருந்த பதாகை.
டில்லி முதல்வராக இருந்தபோது, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார விளக்குகள், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டிவி'க்கள் உட்பட பல்வேறு ஆடம்பர பொருட்களுடன் கூடிய அரசு பங்களாவில் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்தது அம்பலமாகியுள்ளது.