UPDATED : அக் 12, 2026 07:50 AM
ADDED : அக் 10, 2026 04:25 AM

தேவையான பொருட்கள்
தேங்காய் பால்ஸ் செய்ய:
¼ கப் டெசிகேடட் தேங்காய் பவுடர்
4 ஸ்பூன் பால் பவுடர்
3 ஸ்பூன் மில்க்மெயின்ட்
2 ஸ்பூன் நெய்
சிறிது ரோஸ் புட் கலர்
ரோஸ் எசென்ஸ் சிறிது
பனீர் பால்ஸ் செய்ய:
¼ கப் துருவிய பனீர்
2 ஸ்பூன் பால் பவுடர்
2 டேபிள்ஸ்பூன் மில்க் பெயின்ட்
1ஸ்பூன் நெய்
சிறிது பச்சை புட் கலர்
சிறிது ஏலக்காய் எசென்ஸ்
கோவா பால்ஸ்
1/8 இனிப்பில்லாத கோவா
1 ஸ்பூன் மில்க் பெயின்ட்
1 ஸ்பூன் பால் பவுடர்
1 ஸ்பூன் பாதாம் பவுடர்
1/4நெய்
சிறிதுமஞ்சள் புட் கலர் சிறிதுவெனிலா எசென்ஸ்
செய்முறை :
கோவா பால்ஸ் செய்முறை:
வாணலியில் நெய் விட்டு சூடானதும் கோவாவை உதிர்த்து போட்டு கிளறவும். பின் மில்க்மெயின்ட் பால் பவுடர் பாதாம் பவுடர் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். நன்கு ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவிடவும்.
பனீர் பால்ஸ் செய்முறை:
மிக்ஸியின் துருவிய பனீர் மில்க்மெயின்ட் பால் பவுடர் சேர்த்து அரைக்கவும். பின் நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பனீரை சேர்த்து நன்று கிளறவும். பின் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து கிளறி ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி ஆற விடவும்.
கோகனட் பால்ஸ் செய்முறை:
நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும். பின் பால் பவுடர் மில்க்மெயின்ட் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். நன்று சேர்த்து திரண்டு வரும் போது இறக்கி ஆறவிடவும். பின் இது அனைத்தையும் தனித்தனியா நன்று பிசைந்து கொள்ளவும். பின் முதலில் கோவா பால்ஸை சின்ன உண்டைகளாக உருட்டி வைக்கவும். பின் பனீர் பால்ஸை கோவா பால்ஸை விட சற்று பெரியதாக உருட்டி வைக்கவும்.
பின் கோகனட் பால்ஸை அந்த இரு பால்ஸை விட சற்று பெரியதாக உருட்டி வைக்கவும். இப்போது கைகளில் சிறிது நெய் தடவி பனீர் பால்ஸை கிண்ணம் போல் செய்து கொள்ளவும்.
பின் அதனுடன் கோவா பால்ஸை வைத்து பின் நன்கு உருட்டி பிரிட்ஜில் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். பின் கோவா பால்ஸை கிண்ணம் போல் செய்து அதனுள் செட் ஆன பனீர் கோவா பால்ஸை மெதுவாக வைத்து மூடி உருட்டவும். பின் இதை பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைத்து கட் செய்து கொள்ளவும். மூன்று வண்ண கலர் மற்றும் எசென்ஸ் மூன்றும் வெவ்வேறு ருசியில் இருக்கும்.
