தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/கருப்பு எள்ளில் இனிக்கும் ஐஸ்கிரீம்

கருப்பு எள்ளில் இனிக்கும் ஐஸ்கிரீம்

கருப்பு எள்ளில் இனிக்கும் ஐஸ்கிரீம்


UPDATED : அக் 11, 2026 08:14 AM

ADDED : அக் 10, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 08:14 AM ADDED : அக் 10, 2026 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எள்ளுருண்டை, எள்ளுப்பொடி, துவையல் எனப் பல வகைகளில் பயன்படுத்தப்படும் கருப்பு எள்ளில், புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன.

இத்தகைய கருப்பு எள்ளை வைத்து, வித்தியாசமான சுவையில் ஐஸ்கிரீம் தயாரித்து வழங்குகிறது, பீளமேட்டில் உள்ள யுகீரா ஜப்பானிய உணவகம். பாரம்பரியமாக உணவில் இடம்பெறும் கருப்பு எள்ளை, நவீன இனிப்பு வகையாக மாற்றியிருப்பது உணவுப் பிரியர்களுக்கு ஒரு புதிய சுவை அனுபவத்தை வழங்குகிறது.

உணவகத்தின் செயல்பாட்டுத் தலைவர் நீல் கூறுகையில், ''உணவகத்தைத் தொடங்கும்போதே வழக்கமான இனிப்புகளைத் தாண்டி, வித்தியாசமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். கருப்பு எள் பொதுவாகக் கார உணவுகளில் பயன்படுத்தப்படுவது. அதை இனிப்பாக மாற்றலாம் என்ற எண்ணத்தில் பலமுறை முயற்சி செய்து, ஆராய்ந்த பிறகே இந்த ஐஸ்கிரீமை மெனுவில் சேர்த்தோம்'' என்றார்.

கருப்பு எள்ளை வறுத்து விழுதாக அரைத்து, முழுக் கொழுப்புச் சத்து கொண்ட பாலாடைக் கிரீம், சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து கைகளால் கடைந்து தயாரிக்கின்றனர். செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்திகள் சேர்ப்பதில்லை.

இந்த ஐஸ்கிரீமைப் புளிப்புச் சுவையுள்ள பிரெடிலிருந்து தயாரிக்கப்பட்ட மொறுமொறுப்பான பொடி, வறுத்த பாதாம் துணுக்குகளுடன் பரிமாறுகின்றனர். இனிப்பு, லேசான உப்புச் சுவை, மொறுமொறுப்பான தன்மை ஆகியவை இணைந்து வித்தியாசமான சுவையைத் தருகின்றன.

வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதுடன், அதிகம் விற்பனையாகும் இனிப்புகளில் ஒன்றாகவும் உள்ளது.

உணவகத்தின் மெனுவில் கருப்பு எள் ஐஸ்கிரீம் மட்டுமல்லாமல், ஜப்பானிய உணவுகளில் பயன்படுத்தப்படும் புளிக்கவைக்கப்பட்ட சோயாப் பசையான மிசோவைக் கொண்டு தயாரிக்கப்படும் மிசோ ஐஸ்கிரீமும் இடம்பெற்றுள்ளது.

வழக்கமாகக் கார உணவுகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை இனிப்புகளாக மாற்றுவது இவர்களின் உணவுத் தயாரிப்பு அணுகுமுறையாக உள்ளது .

யுகீரா ஜப்பானிய உணவகம், பீளமேடு.

78450 90921.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us