தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : செப் 12, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:  கடுகை அரைத்து மீனில் தடவி சிறிது நேரம் ஊறவைத்த பின், அவற்றை குழம்பில் சேர்த்தால், மீன் உடையாமல் இருக்கும்.

 பரோட்டாவுக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்கு பதிலாக சோடா சேர்த்து பிசைந்தால், பரோட்டா பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

 இஞ்சி, சீரகம் போன்றவற்றை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது.

 தயிர் சாதம் செய்யும்போது, சாதத்தை சிறிது பாலுடன் சேர்த்து குழைய வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பின் தாளித்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கிளறினால் சுவையான தயிர் சாதம் தயார்.

 சூப், கிரேவி போன்ற உணவுகள் தயாரிக்கும் போது, கிரீம் இல்லையெனில், வெண்ணெய்யுடன் பாலை நன்கு கலந்து கிரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

 உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, கெட்டித் தயிர் சேர்த்து வதக்கினால், அதன் சுவை அருமையாக இருக்கும்.

 வாரத்துக்கு இருமுறை பனங்கற்கண்டு சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் பிரச்னை குணமாகும்.

 கறிவேப்பிலை துவையல் செய்யும்போது உளுந்தம் பருப்புக்குப் பதிலாக வேர்க்கடலையை வறுத்து சேர்த்தால், துவையலின் சுவை கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us