ADDED : அக் 16, 2025 05:38 AM

இந்திய மக்களால் அதிகம் விரும்பி சுவைக்கப்படும் இனிப்பு வகைதான், குலோப் ஜாமூன். குறிப்பாக, குழந்தைகளின் முதல் விருப்ப பட்டியலில், டாப் இடம் இதற்குதான்.நம் நாட்டின் பாரம்பரிய இனிப்பாக மாறி போன குலோப்ஜாமூன், உண்மையில் பெர்சிய நாட்டில் இருந்துதான் இங்கு வந்துள்ளது.
பெர்சிய மொழியில், குல் என்றால் மலர் என்றும், லாப் என்றால் தண்ணீர் என்றும் கூறுவார்களாம். ரோஜா நீரில் ஊறவைத்த இனிப்பு என்பது பொருள். பெர்சிய நாட்டில், 'லுக்மாட் அல் குவாடி' என்று அழைக்கிறார்கள். நம் குலோப்ஜாமூன் வடிவத்திற்கும், சுவைக்கும், ஜீராவுக்கும் இணையானதாக உள்ளதாக கூறப்படுகிறது. முகலாய மன்னர்களில் ஒருவரான ஷாஜகானின், சமையல் கலைஞர் ஒருவர், பெர்சியா இனிப்பை அடிப்படையாக கொண்டு சமைத்து, இந்தியாவில் அறிமுகப்படுத்தியதாக, வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. நன்றி சொல்வோம் அந்த பிரமாத சமையல் கலைஞருக்கு!