/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
கண்களை எப்படி அசைத்தாலும் கூடவே பறக்கும் பூச்சி..! காரணம் இதுதான்
/
கண்களை எப்படி அசைத்தாலும் கூடவே பறக்கும் பூச்சி..! காரணம் இதுதான்
கண்களை எப்படி அசைத்தாலும் கூடவே பறக்கும் பூச்சி..! காரணம் இதுதான்
கண்களை எப்படி அசைத்தாலும் கூடவே பறக்கும் பூச்சி..! காரணம் இதுதான்
UPDATED : ஆக 19, 2022 05:31 PM
ADDED : ஆக 19, 2022 03:43 PM

காலை தூங்கி எழுந்தவுடன் உள்ளங்கைகளைக்கொண்டு அழுத்தித் தேய்த்து நமது கண்களைக் கசக்கிவிட்டுப் வெளிச்சத்தைப் பார்க்கும்போது நமது கண் முன்னே சிறிய புழு அளவிலான நிழல்கள் நமது விழியோட்டத்துக்கு ஏற்ப அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருக்கும். நாம் பிரகாசமான வானத்தைப் பார்த்தால் இவை வானத்தில் பறப்பது போலக் காட்சியளிக்கும். இவற்றை உற்று நோக்கி அவை நகரும் பாதையைப் பின்தொடர்ந்தால் அவை வேகமாக நகரும். நாம் நமது குழந்தைப் பருவத்தில் இந்த நிழல்களை துரத்தி விளையாடியிருப்போம். இவற்றின் பெயர் என்ன, இவை எதனால் நமது கண் முன்னே தோன்றுகிறது எனப் பார்ப்போமா?
இந்த நிழல்களின் பெயர் ஃப்ளோட்டர்ஸ் (floaters). இவை வட்டம், நீளம், செங்குத்துக்கு வடிவிலோ அல்லது வளைந்த கம்பு, கைத்தடி வடிவிலோ விழித்திரை முன் அங்குமிங்கும் நகரும். நமது கண்களில் கோடிக்கணக்கான சிறு ஆப்டிக்கல் செல்கள் உள்ளன. இவை மூளையின் பின்புறத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.
![]() |
நமது விழித்திரைக்கு (retina) முன் விட்ரியஸ் (vitreous) என்கிற ஜெல்லி போன்ற நுண்ணிய செல்கள் அமைந்துள்ளன. நமக்கு வயது அதிகரிக்கும்போது இவற்றின் ஜெல்லி தன்மை அதிகரிக்கும். இதனால் இவற்றில் ஈரத்தன்மையும் அதிகரிக்கும். விழித்திரை தனக்கு கிடைத்த தலைகீழ் பிம்பத்தை நேராக மாற்றி மூளையின் உத்தரவுப்படி நமது கருவிழி மூலம் நாம் காணும் காட்சியைக் காட்டும்.
![]() |
விழித்திரை காட்சி விட்ரியஸ்-ஐ தாண்டிதான் வெளியே செல்லவேண்டும். விட்ரியஸில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது இதன் நிழல்களையும் காட்சிகளுடன் சேர்த்து விழித்திரை வெளியே எடுத்துச் செல்லும். இந்த நிழல்கள்தான் ஃப்ளோட்டர்கள் எனப்படுகின்றன. விட்ரியஸ்ஸின் வடிவத்துக்கு ஏற்ப இந்த நிழல்களின் உருவம், அளவு மாறுபடும். நாம் நமது கருவிழியை எந்த பக்கம் நகர்த்தினாலும் விட்ரியஸ் நிழல்களும் காட்சிக்கு இடையே குறுக்கிடும். இவை கண்ணாடி போன்றவை என்பதால் நமது பார்வையை மறைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



