தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆரோக்கியத்திற்கு 21 வழிகள்!

ஆரோக்கியத்திற்கு 21 வழிகள்!

ஆரோக்கியத்திற்கு 21 வழிகள்!


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காலையில், சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரியன் உதயமாகும் போது, துாக்கம் கலைந்து எழுவது

* தினமும் வெறும் வயிற்றில், தேனில் ஊறிய இஞ்சி சாப்பிடுவது

* துாங்கி எழுந்த இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவு சாப்பிடுவது

* தினமும், 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது

* மதிய உணவை, 12:00 - 1:00 மணிக்குள் சாப்பிடுவது

* தினமும், 2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது

* பகலில் துாங்காமல் இருப்பது

* இரண்டு வேளை மலம் கழிப்பது

* முட்டை, பால், பால் பொருட்களை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது

* அப்பளம், ஊறுகாய், இறால், காலிபிளவர், மைதா, கடலை மாவை முற்றிலும் தவிர்ப்பது

* வெயில் காலத்தில் நல்லெண்ணெய், குளிர் காலத்தில் கடலை எண்ணெய் பயன்படுத்துவது

* மாதம் இரண்டு அல்லது மூன்று முறை கீரை சாப்பிடுவது

* வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது, மாதம் ஒரு முறை மலமிளக்கி மருந்து சாப்பிடுவது

* இரவு உணவை, 7:30 - 8:00 மணிக்குள் சாப்பிடுவது

* இரவு, 10:00 முதல் காலை, 6:00 மணி வரை துாங்குவது

* இரவில் கண் விழிக்காமல் இருப்பது

* மது, சிகரெட் பழக்கத்தை தவிர்ப்பது

* இரு பாலினத்தவரும் தங்களின் உடற்கூறியல் பற்றிய அறிவை வளர்த்து, எதிர்பாலினத்தவரின் நலனில் அக்கறையுடன் இருப்பது

* அந்தந்த பருவத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது

* கண்டந்திப்பிலி, வேப்பம் பூ, ஓமம், வெந்தயம், சதகுப்பை, கசகசா, மிளகு, சீரகம், மஞ்சள், சோம்பு, தனியா, மாசிக்காய் போன்றவற்றை அவசியம் சமையலறையில் வைத்திருந்து, தேவையான போது அவசியம் பயன்படுத்த வேண்டும்.

டாக்டர் மது கார்தீஸ்

சித்த மருத்துவர், சென்னை.

99944 93687


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us