தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மார்ஜாரி ஆசனா

மார்ஜாரி ஆசனா

மார்ஜாரி ஆசனா


PUBLISHED ON : ஆக 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்முறை:

1.மெதுவாக குதிகால்களின் மேல் உட்காரவும்.

2.பின் புட்டத்தை உயர்த்தி, முட்டி போடவும். கைகளும் தொடைப் பகுதியும் ஒரே நேர்கோட்டில் செங்குத்தாக இருக்க வேண்டும்.

3.மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, முதுகை வளைத்து, தலையை நன்கு மேலே உயர்த்த வேண்டும்.

4.முடிந்த வரை வயிற்றை பெரிதாக்கி, நுரையீரலில் அதிக அளவு காற்றை நிரப்பி, சில வினாடிகள் மூச்சை அடக்கி வைக்க வேண்டும்.

5.பின், மூச்சை வெளியிட்டுக் கொண்டே, முதுகை மேல் நோக்கியும், பின் தலையை கீழ் நோக்கியும் கொண்டு வர வேண்டும்.

6.வயிற்றை சுருக்கி, முகத்தை தொடையை நோக்கி இழுக்க வேண்டும். சில வினாடிகள் கழித்து மெதுவாக சாதாரண நிலைக்கு வர வேண்டும்.



கால அளவு:


8 முதல் 12 சுற்றுகள் செய்யவும்.

பயன்கள்:

* கழுத்து முதுகெலும்பு வளையும் தன்மை மேம்பட்டு கழுத்து, முதுகு வலி குறையும். பெண்களின் இனவிருத்தி மண்டலம், நன்கு செயல்பட்டு, மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில், இந்த ஆசனத்தை செய்யும்போது, வயிற்று வலி குறையும். நுரையீரல் நன்கு விரிவடைந்து, அதன் செயல் திறன், நன்கு நடக்கும்.

- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us