தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஆக 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1 உடல் வலிக்கு மாத்திரை சாப்பிட்டவுடன், அது ரத்தத்தில் கலந்து நிவாரணம் கொடுக்கிறதா?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள், ரத்தம் மூலம், வலி உள்ள இடத்துக்குப் பயணிக்கிறது; இதனால், வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

2 உடலில் ரத்தம் பயணிக்கும் போது, எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை, ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருட்கள் வடிவத்தில், ஆற்றலை, அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஆரோக்கியமாக இருக்க, ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

3 ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து, அனைத்துத் திசுக்களுக்கும், ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில், திசுக்களில் இருந்து, கார்பன் - டை - ஆக்சைடை, நுரையீரலுக்கு எடுத்து வந்து, மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

4 24 மணிநேரத்தில், சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு ?

24 மணிநேரத்தில் சுழற்சி முறையில், 1,700 லிட்டர் ரத்தத்தை, சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. அதில், ஒன்றரை லிட்டர் சிறுநீரை, அவை வெளியேற்றுகின்றன.

5 கர்ப்பிணிக்கு 'ஆர்எச் நெகட்டிவ்' ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் கவனமுடன் இருக்க வேண்டும்?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து, மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால், குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.

6 மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால், விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்வது ரத்தம் தான். தொடர்ந்து, மூன்று நிமிடங்களுக்கு, ஆக்சிஜன் செல்லாவிட்டால், மூளையின் செல்கள் உயிரிழந்து விடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில், கோளாறு ஏற்பட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

7 ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள, 13 காரணிகளில், முதல் காரணியில் 'பிப்ரினோஜன்' என்ற வேதிப்பொருள் தான், ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள, 'பிளாஸ்மா'வில், இது இல்லாவிட்டால், ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் 'பிளாஸ்மா'வுக்கு, 2.54 கிராம் என்ற விகிதத்தில், 'பிப்ரினோஜன்' உள்ளது.

8 ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. 'ஏ, பி, ஏபி, ஓ' என, நான்கு குரூப்புகள் உள்ளன. இவை தவிர, 'ஏ 1, ஏ 2' என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. 'ஓ' பிரிவு ரத்தம், அனைவருக்கும் சேரும் என்பதால்தான், 'ஓ' குரூப் ரத்தம் உள்ளோருக்கு, 'யுனிவர்சல் டோனர்' என்று பெயர்.



9 ரத்தம், எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?


ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில், 'ஆன்டிஜன்' எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப, குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில், 'ஏ' ஆன்டிஜன் இருந்தால், 'ஏ' குரூப்; 'பி' ஆன்டிஜன் இருந்தால், 'பி' குரூப்; 'ஏபி' என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால், 'ஏபி' குரூப்; எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால், 'ஓ' குரூப் ஆகும்.

10 'ஆர்.எச்., நெகட்டிவ்' ரத்தத்தை, 'ஆர்.எச்., பாசிட்டிவ்' உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம்; ஆனால், நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு, இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம்பெண்களுக்கு மாறுபட்ட,

'ஆர்.எச்.,' ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

- கே.செல்வராஜ்,

பொது மருத்துவர். ராஜிவ் காந்தி அரசு பொது

மருத்துவமனை ரத்த வங்கியின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி.

சென்னை.

98410 67775

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us