sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

'ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கும் பெர்பெக்ட் ஹெல்த்தி மனநிலை

/

'ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கும் பெர்பெக்ட் ஹெல்த்தி மனநிலை

'ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கும் பெர்பெக்ட் ஹெல்த்தி மனநிலை

'ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கும் பெர்பெக்ட் ஹெல்த்தி மனநிலை


PUBLISHED ON : அக் 20, 2024

Google News

PUBLISHED ON : அக் 20, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக் என்றாலே வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்று நம்பினோம். தற்போது, இளம் வயதினருக்கு மத்தியில் பொதுவான விஷயமாகி விட்டது.

தற்போதுள்ள நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் சரியான சமயத்தில் சிகிச்சை கிடைத்தால், ஹார்ட் அட்டாக் வந்தாலும், உயிரை காப்பாற்ற முடிகிறது என்றாலும், ஹார்ட் அட்டாக்கிற்கு பின் ஏற்படும் பக்க விளைவுகள், இயல்பான வாழ்க்கை வாழ முடியாமல் முடக்கி விடுகிறது.

'பெர்பெக்ட் ஹெல்த்தி' என்ற ஆங்கில வார்த்தை தற்போது இளம் வயதினர் மத்தியில் பிரபலமாக உள்ளது.

அதாவது, ஆரோக்கியம் என்பதற்கு சரியான உதாரணமாக நாம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில் தான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

குறிப்பாக, 'பிட்னஸ்' எனப்படும் உடல் தகுதியில் ஆர்வமுள்ள இளைஞர்களை இந்த மனநிலை பாதிக்கிறது. தீவிரமான உடற்பயிற்சி செய்யும் போது, ஜிம் ஒர்க் அவுட் சமயங்களில், ஹார்ட் அட்டாக்கால் ஏற்படும் உயிரிழப்பை அடிக்கடி செய்திகளில் படிக்கிறோம்.

இது, பெர்பெக்ட் ஹெல்த்தியில் உள்ள ஆர்வத்தின் விளைவு தான்.

மரபியல் காரணங்களால், 'பிளாக்' எனப்படும் ஒட்டும் தன்மையுள்ள பிசுபிசுப்பான படிமம், ரத்த நாளங்களுக்கு உள்ளே படிகிறது. இதனால், பிரதான உறுப்புகளுக்கு ரத்தம், ஆக்சிஜன் செல்வது தடைபட்டு, ஹார்ட் அட்டாக், பக்கவாதம் வருகிறது.

ஹார்ட் அட்டாக் வந்த பின், மருந்துகள், ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்வது தீர்வாக அமையும். இதை விட, பிரச்னை வருவதற்கு முன், வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்வது, ஹார்ட் அட்டாக் வராமலேயே தடுக்கும்.

தீவிர உடற்பயிற்சியால் இதய ஆரோக்கியத்தை சீராக நிர்வகிக்கலாம் என்பது தவறான கருத்து.

உடற்பயிற்சியை தினசரி ஒழுங்குமுறையாக மாற்ற வேண்டும். தினசரி நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, ஏரோபிக் பயிற்சிகள், தசைகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகள், தசை தளர்வு பயிற்சிகளை வாரத்தில் 150 நிமிடங்கள் செய்தால் போதும்.

பல ஆய்வுகள் நமக்கு சொல்வது, மிதமான உடற்பயிற்சிகள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். அதை விடுத்து தீவிரமாக பயிற்சி செய்யும் போது, குறிப்பாக மாரத்தான் ஓட்டம், பளு துாக்குவது போன்ற பயிற்சிகள் செய்யும் போது, ரத்த நாளங்கள் கிழிவது, கொரோனரி ஆர்ட்டரி பாதிப்பு, பிளாக் வெடித்து ரத்தம் ஓட்டம் தடைபட்டு ஹார்ட் அட்டாக் வருகிறது.

தீவிர பயிற்சி செய்யும் போது, ரத்த நாளங்களின் உள்ளே கால்சியம் படிவதும் நடக்கும். இதுவும் அபாயகரமான காரணிகளில் ஒன்று.

இது தவிர, உடற்பயிற்சியின் போது சீரற்ற இதயத் துடிப்பு, இதய வால்வுகளில் பிரச்னை, அயோட்டா எனப்படும் மகா தமனி கிழிவது போன்ற பிரச்னைகளும் வரலாம்.

ஆர்வம் மிகுதியால் தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், இந்த அறிகுறிகளை ஆரம்பத்தில் கவனிக்காமல் போகலாம்.ஆபத்து காலத்தில் முதலுதவி செய்ய, பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதும் அவசியம்.

டாக்டர் ஒய்.விஜய சந்திர ரெட்டி,

மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்,

அப்போலோ மருத்துவமனை, சென்னை

044 - 2829 0200info@apollohospitals.com






      Dinamalar
      Follow us