தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பழகும் வாய்ப்பை மறைத்த முகக் கவசம்!

பழகும் வாய்ப்பை மறைத்த முகக் கவசம்!

பழகும் வாய்ப்பை மறைத்த முகக் கவசம்!


PUBLISHED ON : பிப் 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா ஊரடங்கு காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, நடத்தை திறன் வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். குறிப்பாக, மற்றவர்களுடன் பழகுவதில் இப்பிரச்னை இருக்கும்.

காரணம், ஊரடங்கு நேரத்தில் வெளி மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு இருக்கவில்லை. தவிர, அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்ததால், முக உணர்வுகளை பார்த்து கற்கும் வாய்ப்பும் அரிதாகவே இருந்தது.

இது குறித்து, ஐரிஷ் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், கொரோனா வைரஸ் பரவல் துவங்கிய முதல் மூன்று மாதங்களில் பிறந்த 309 பச்சிளங் குழந்தைகளை, தொற்று பரவலுக்கு முன் பிறந்த 1,629 பச்சிளங் குழந்தைகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்ததில், இது உறுதியாகி உள்ளது.

கொரோனா சமயத்தில் பிறந்த குழந்தைகளில், 25 சதவீதம் பேர், அடுத்த 12 மாதங்கள் தங்கள் வயதையொத்த குழந்தைகளுடன் அவர்கள் பாஷையில் ஒரு வார்த்தை, ஏதாவது பொருளை சுட்டிக் காட்டி பேசுவது, 'பை... பை...' சொல்வது போன்றவற்றை, நேரில் பார்த்து பகிரும் வாய்ப்பே இல்லாமல் இருந்துள்ளது. ஆனாலும், அதிக நேரம் வீட்டிலேயே இருந்ததால், தவழும் நேரம் கொரோனாவிற்கு முன் பிறந்தவர்களை விட இவர்களுக்கு அதிகம்.

முகக் கவசம் இல்லாமல் முகத்தைப் பார்த்து, மொழியை பேசி கேட்கும் வாய்ப்பு, புதிய விஷயங்களை சுட்டிக் காட்டி கற்கும் வாய்ப்பு இல்லாமல் போனாலும், இதை அப்படியே விடாமல், இந்தக் குழந்தைகள் பள்ளி செல்லும் போது, இவற்றை கவனித்து, இதன் தாக்கங்களை நீண்ட காலத்திற்கு விடாமல், சரி செய்யத் தேவையானதை செய்ய வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

- ஆர்கீவ்ஸ் ஆப் ரிசர்ச் இன் சைலட் ஹூட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us