தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: இளநீரின் சுத்தம் போன்றது இசை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: இளநீரின் சுத்தம் போன்றது இசை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: இளநீரின் சுத்தம் போன்றது இசை!


PUBLISHED ON : ஆக 12, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வருத்தம் மற்றும் கவலைகளால் பாதிக்கப்பட்ட மனதை சரி செய்யும் சக்தி, இசைக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. வரலாற்று பக்கங்களை எடுத்து பார்த்தால், உலகில் பல்வேறு கலாசாரத்தை சேர்ந்தவர்கள், மனப் பதற்றத்தை குறைத்து, அமைதிப்படுத்த இசையை பயன்படுத்தி இருக்கின்றனர்.

உதாரணமாக, குற்றவாளிகளிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்பவர்கள், துருக்கி போலீசார். உலகிலேயே இவ்வளவு மிருகத்தனமாக நடக்கும் போலீஸ்காரர்கள் வேறு யாரும் கிடையாது என்று பெயர் பெற்றவர்கள்.

அலுவல்களை துவங்கும் முன், அவர்களை தினமும் ஒரு மணி நேரம், ஆஸ்திரிய இசை மேதையான, மொசார்ட்டின் இசையை கேட்கும்படி செய்ததில், அவர்கள் நடத்தையில் வியப்பான மாற்றம் நடந்தது; நிதானமான மனநிலையுடன் அவர்களால் செயல்பட முடிந்தது.

இசையால் எப்படி இது போன்ற அதிசயங்களை ஏற்படுத்த முடிகிறது என்ற சூட்சுமம் எனக்கு விளங்கவில்லை. இதுபற்றி குருநாதர், பாலமுரளி கிருஷ்ணாவிடம் கேட்டேன்.

அவர், 'இசையை பயிற்சி செய்யும் போது அல்லது கேட்கும் போது, மனதின் முழு கவனத்தையும் ஈர்க்கும் வல்லமையும், மனப்பிரச்னைகளை குணப்படுத்தும் சக்தியும் இசைக்கு உண்டு' என்றார்.

குறிப்பிட்ட ஸ்வரங்கள், ராகங்களை முழு கவனத்தோடு கேட்டால், நம் மனதில் பல அற்புதங்களை ஏற்படுத்தும். பாரம்பரிய இசையில், நேரத்திற்கு ஏற்ப பாடும் ராகங்கள் உள்ளன. எல்லா ராகத்தையும், எல்லா நேரத்திலும் பாடலாம் என்றாலும், குறிப்பிட்ட ராகத்தை, குறிப்பிட்ட நேரத்தில் பாடினால், முழுமையான பலன் கிடைக்கும்.

காலையில் பைரவி ராகத்தை பாடினாலோ, கேட்டாலோ, உடனடியாக மனதில் ஒரு அமைதி ஏற்படும். நம் உடம்பில் ஏற்படும் வேதி மாற்றங்களுக்கும், மனதின் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு என்பது, விஞ்ஞான உண்மை. அதனால் தான், நுாற்றாண்டுகளுக்கு முன்பே, நம் உடல் மற்றும் மனதின் வேதி மாற்றங்களில், நேர்மறை பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக ராகங்களை உருவாக்கியுள்ளனர். இசையின் சக்தியை சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

முதன்முறையாக, மேடை கச்சேரிகள், 1990ல் செய்ய ஆரம்பித்தேன்; 2010 வரை போதுமான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. மெதுவாக, மன அழுத்தத்திற்கு உள்ளானேன்; ஒரு, 'பிரேக்' தேவைப்பட்டது. பல வகையான இசையையும் கேட்க ஆரம்பித்தேன். ஹிந்தி பாடகர், கிஷோர் குமாரின் பாடல்கள், மனதிற்கு புத்துணர்வை தந்தன.

வேதங்களில் இருந்து கிடைத்த இந்திய பாரம்பரிய இசை, விஞ்ஞான அடிப்படையில் உருவானது. 24 மணி நேரத்தில், வெவ்வேறு சுழற்சிக்கு ஏற்ப, தனித்தனியாக உருவானவை. நரம்புகளை சாந்தப்படுத்தி, மனதிற்கு அமைதியை தருவதால், மனதில் உள்ள அழுத்தம், படபடப்பு குறைகிறது.

குறிப்பிட்ட இசைக்கு மட்டுமே இந்த சக்தி உண்டு என சொல்ல முடியாது. பூமியில் இருந்து நீரை உறிஞ்சி எடுத்து, மரத்தின் உச்சியில், சுத்தமான இளநீராக்கி தருகிறது தென்னை. இளநீரை நேரடியாக நம்முடைய நரம்புகளில் செலுத்தலாம் என்ற அளவிற்கு, சுத்தமான இயற்கை நீர், இளநீர். அதைப் போன்றது இசை!



இளவரசர் அஸ்வதி திருநாள் ராம வர்மா,

கர்நாடக இசைப் பாடகர், திருவனந்தபுரம்.

writetoramavarma@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us