PUBLISHED ON : ஆக 12, 2018

என் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை, யாராலும் புரிந்து கொள்ள முடியாது. எட்டு வயதில் இருந்து பயிற்சி செய்கிறேன். பேட்மின்டன் தான் என் வாழ்க்கை என, 12 வயதில் முடிவு செய்தேன். பிறந்த இடமான ஸ்பெயினில் ஹியுல்வாவை விட்டு, மேட்ரிட்டில் தனியாக வசிக்கிறேன். நிறைய புரதம், கொஞ்சம் கார்போ ஹைட்ரேட் என, என்ன சாப்பிட வேண்டும் என்பது தெரியும்; ஐஸ்கிரீம், சாக்லேட், கேக் சாப்பிடக் கூடாது என்பதும் புரியும்.
என் பயிற்சி பற்றிய விபரங்களை சொல்ல மாட்டேன்; அது பரம ரகசியம். உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன், என் பயிற்சி இன்னும் கடினமானதாக ஆகிவிடும். 'இது போன்ற பயிற்சியை, என் மகன், மகளுக்கு நிச்சயம் தர விரும்ப மாட்டேன்' என, என் பயிற்சியாளர் சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் பயிற்சி முடிந்தவுடன் கதறி அழுவேன். அந்த அளவிற்கு உடலும், மனமும் ரணமாகியிருக்கும். சாதிக்க வேண்டும் என்றால், இது போன்ற வலிகளை அனுபவித்தே தீர வேண்டும்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில், சிந்துவை வென்ற தருணத்தில், அழுது, ஆர்ப்பரித்த போது, என் வலிகள் மனதில் வந்து போனது. எனக்கு போட்டி யாரும் இல்லை. முழு பலத்துடன் களத்தில் இறங்கினால், என்னை வெல்ல யாராலும் முடியாது.
கரோலினா மரின்,
பேட்மின்டன் ஆட்டக்காரர், ஸ்பெயின்.
