தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை

மன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை

மன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை


PUBLISHED ON : ஆக 12, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன நலன் பாதிப்பு, மன நோய் இரண்டும் ஒன்றா?

மன நலன் பாதிப்பு என்பது வேறு; மன நோய் என்பது வேறு. ஒரு சம்பவம் மறக்க முடியாததாக இருந்து, அதனால் ஏற்படும் அதிர்ச்சி, கிளர்ச்சி, சந்தோஷம், துக்கம், வெறுப்பு, ஈர்ப்பு, சகிப்பு, அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மன நலன் பாதிப்பு ஏற்படும்.

எனினும், இது தற்காலிகமானது தான். ஓரிரு நாட்களில் மறைந்து விடும். அதிகபட்சம் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும். இதற்கு சிகிச்சை தேவையில்லை. மன நோய்க்கு சிகிச்சையால் மட்டுமே தீர்வு காண இயலும்.

மன நோய் முற்றியோருக்கு கட்டாய சிகிச்சை அளிக்கலாமா?

இதற்கு 'இந்திய மன நல மருத்துவ சட்டம்' இடமளிக்கவில்லை. இச்சட்டம் 2017 ஏப்.,27 ல் அமலானது. இச்சட்டத்தின் படி சிகிச்சைக்கு மறுக்கும் மன நோயாளியை கட்டாயப்படுத்தி சிகிச்சை அளிக்கவோ அல்லது மருந்து கொடுக்கவோ கூடாது.

அப்படி செய்வது குற்றமாக கருதப்படும். 'மன நோயாளி' என மன நல மருத்துவரிடம் சான்று பெற்று உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்தால் மட்டுமே மன நோயாளிக்கான சிகிச்சை எளிமையாகும், என்பது குறித்து மன நல மருத்துவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

மன நோயாளிக்கு உரிய சிகிச்சைக்கு பின் இயல்பு நிலை ஏற்படுமா?

மன நோய்க்கு மன நல மருத்துவரிடம் முறைப்படி தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாரம், ஒரு மாதம் என ஒருமுறை மருந்து உட்கொள்ளும் எளிய சிகிச்சை முறைகள் வந்து விட்டன.

இம்மருந்துகள் சுவை, நிறம் இல்லாத பவுடராகவும், மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. இவற்றை மன நல மருத்துவர் ஆலோசனைப்படி உணவில் கலந்து கொடுக்கலாம்.

இதனால் உணவின் சுவை மாறாது. இம்மருந்துகளை மன நோயாளிக்கு தெரிந்தும், தெரியாமலும் கொடுக்க முடியும்.

மன நோய் ஏற்பட காரணம் என்ன?

மரபணு, பாரம்பரியம் போன்ற காரணங்களால் வரலாம். மூளை கட்டி, சர்க்கரை நோய், விபத்தில் ஏற்படும் தலைக்காயம் போன்றவற்றாலும் மன நோய் வரலாம். மன நல மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். மந்திரம், மந்திரீகம், வழிபாட்டு தலங்களில் தங்க வைப்பது போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

தொந்தரவு செய்யாத மன நோயாளியை, அவர் போக்கிலேயே விட்டு விடலாமா?

அப்படி செய்வது தவறு; சிகிச்சை பெற வேண்டும். துவக்கத்திலேயே நோய்க்கான காரணியை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்த முடியும்.

நோய் முற்றிய நிலையில் சிகிச்சை மேற்கொள்வது, நோயாளிக்கும், அவருக்கு உதவுபவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையின் உள் நோயாளியாக சேர்த்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க நேரிடும்.

- டாக்டர் குமணன்

மன நல மருத்துவ நிபுணர் மதுரை

அலைபேசி: 98431 65135

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us