தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு


PUBLISHED ON : அக் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்டம்பர், 15, 2016: மகன், மருமகள் பராமரிப்பில் வாழும், 70 வயது ரகுநாத்திற்கு, எதிர்பாராமல் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. கழுத்துப் பகுதியில் இறுக்கம் உண்டாகி, முதுகில் கூன் விழுந்தது. பக்கவாதமாக இருக்குமோ என்று நினைத்தவர்களுக்கு, மருத்துவர், பாதிப்பின் அறிகுறி, 'பார்கின்சன்' என்று கூறியதோடு, மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்து என்னிடம் அனுப்பி வைத்தார். 'பார்கின்சன்' என்பது, மத்திய நரம்பு மண்டலத்தை (Central Nervous System) பாதிக்கும் நோய், நரம்புத் திசுக்கள் பாதிப்பதால், இந்நோய் உண்டாகிறது. இந்த நோயால், மூளையில், 'சப்ஸ்சான்டியா நிக்ரா' (substantia nigra) என்ற பகுதியில் உள்ள நரம்புத் திசுக்கள் அழிகின்றன. அந்த இடத்தில்தான், உடல் அசைவு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும், 'டோப்பமைன்' என்ற புரதம் உருவாகிறது.

'பார்கின்சன்' நோயில், துரிதமாகச் செயல்படும் நிலை, முக பாவனைகள் குறையும். கழுத்துப் பகுதியிலிருந்து முதுகுத்தண்டுவடத்தில் அழுத்தம் உண்டாவதால், கழுத்தின் செயல்பாடுகள் குறைந்து கூன் விழுகிறது. பல் தேய்ப்பதில், நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும்; தசைகளில் இறுக்கம் ஏற்படும். நிமிர்ந்து நிற்க இயலாத நிலை உண்டாகும். நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ, நிற்கும்போதோ, திடீரென்று விழுவதற்கு வாய்ப்பு உண்டு. கை, கால்களில் நடுக்கம் உண்டாகி, எழுந்து நடக்க முற்பட்டாலே விழுந்து விடுவோமோ என்று பயப்படுவார்கள். பிசியோதெரபியில், முதுகெலும்புத் தசைகளின் செயல்பாடு, நடுக்கத்தை குறைக்க, உறுப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு, உடற்பயிற்சிகள் கொடுக்கிறோம். தவிர, விரல்கள் மூலம், தசைகளுக்கு அழுத்தம் கொடுத்து, வலிகளை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறோம். இயற்கையாகவே 'பார்கின்சன்' நோயாளிகளுக்கு, தசைகளின் செயல்திறன் நாளுக்கு நாள் குறைந்து, மூட்டுகளில் இறுக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மூட்டு மற்றும் தசைகளின் இறுக்கத்தை குறைப்பதுதான், அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தன்னம்பிக்கை. 'பார்கின்சன்' நோயாளிகளுக்கு தேவைப்பட்டால், 'ஆக்குபேஷனல் தெரபி' எனப்படும் பன்முக சிகிச்சையில், நுணுக்கமான வேலைகளை செய்ய, பயிற்சிகள் கொடுக்கப்படும். அதோடு பேச்சு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ரகுநாத்திற்கும் இதுபோன்றே சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது தன்னம்பிக்கையுடன், தன் செயல்களை தானே செய்து கொள்கிறார்.



பி. உமா மகேஸ்வரி


பிசியோதெரபி நிபுணர், சென்னை.

74012 94482

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us