PUBLISHED ON : அக் 05, 2016
அ நிறம் | அளவு
என் வயது 76. இறப்பிற்குப் பின், எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு, தானமாக தர விரும்புகிறேன். இதற்கு நான் யாரை அணுக வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?
எஸ்.சிவம், பேரூர், கோவை
மறைவிற்கு பின், உடலை, மருத்துவ ஆராய்ச்சிக்கு தர வேண்டும் என்ற உங்களின் நோக்கம், பாராட்டுதற்குரியது. உங்களின் விருப்பம் நியாயமானதாக இருந்தாலும், இந்த விஷயத்தை பொறுத்தவரை, உங்கள் மனைவி, குழந்தைகளுக்கு, 'சென்டிமென்ட்'டாக சில நம்பிக்கைகள் இருக்கலாம். அவர்களிடமும், உங்களின் நியாயமான விருப்பத்தை புரிய வைத்துவிடுவது, பின்னாளில், அவர்கள் இதை பக்குவமாக செயல்படுத்துவதற்கு உதவுவதோடு, தேவையில்லாத பிரச்னைகளையும் தவிர்க்கும். சம்பந்தப்பட்டவரின் முழு விருப்பம் இருந்தால், உடல் தானத்திற்கு போதுமானது என்றாலும், மறைவிற்கு பின், உங்களின் ரத்த சொந்தங்கள் அல்லது நெருங்கியவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.
உங்கள் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள உடற்கூறு இயல்துறையை தொடர்பு கொண்டால், அவர்கள் உங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை செய்வார்கள். உடல் தானத்திற்கென்றே தனியான படிவம் ஒன்று உள்ளது. அதில், உங்களின் பெயர், வீட்டு முகவரி, அங்க அடையாளம், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் உட்பட சுய தகவல்கள் அனைத்தும் றிப்பிடுவதற்கென்று தனித்தனியாக பிரிவுகள் அச்சிடப்பட்டு உள்ளது. அதில் தேவையான விபரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால், நீங்கள் உடல்தானம் செய்வதற்கு விருப்பம் உடையவர் என்பதற்கான அடையாள அட்டை தருவார்கள். இந்த படிவத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் இருவரின் சாட்சிக் கையெழுத்தும் போட வேண்டும். இந்த கையெழுத்தை உங்களுக்கு நெருக்கமானவர்கள் யார் வேண்டுமானாலும் போடலாம்.
சம்பந்தப்பட்டவர் இறந்தபின் அவரின் உறவினர்கள், குடும்பத்தினர், அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நிறைவேற்றிய பின் ஆமபுலன்சிலோ அல்லது வேறு வாகனங்களிலோ உடலை கொண்டு வந்து, ஏற்கனவே பதிவு செய்திருந்த அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விட வேண்டும். இதில், குறிப்பாக கவனிக்க வேண்டியது, இறந்தவரின் மனைவி, வாரிசுகள் (இவர்கள் இல்லாத பட்சத்தில் வேறு நெருங்கிய உறவுகள்)
'சம்பந்தப்பட்டவர் தன் உடலை தானம் செய்ய விரும்பினார். எங்களுக்கு இதில் ஆட்சேபணை இல்லை' என்று எழுதி கையெழுத்திட்ட கடிதத்தையும், எங்களிடம் தர வேண்டும். 'இறப்பு இயற்கையானதுதான்' என்ற இறப்பு சான்றிதழ் வேண்டும். சான்றிதழின் உண்மை நகலோடு, ஒரு ஜெராக்ஸ் நகலையும் சேர்த்தே கொண்டு வர வேண்டும். நாங்கள் அதை சரி பார்த்தபின், உண்மை நகலை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்து விடுவோம். கேன்சர் உட்பட எந்த நோய் பாதித்து இறந்திருந்தாலும், உடலை தானம் செய்யலாம். இறப்பு, இயற்கையானதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். கோவை உட்பட, மாநகராட்சிகளில் உள்ள, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், காலை, 8:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை இயங்கும். மற்ற மாவட்ட மருத்துவமனைகள், நகராட்சி மருத்துவமனைகள் என்றால், பணி நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட பணி நேரத்தில் உடலை ஒப்படைக்க முடிந்தால், அந்தந்த மருத்துவமனைகளின் உடற்கூறியல் துறையில் ஒப்படைத்துவிடலாம். அப்படி இல்லாத பட்சத்தில், 24 மணி நேரமும், உள்ளுறை மருத்துவ அதிகாரி இருப்பார். தேவையான ஆவணங்களை, அவரிடம் சமர்ப்பித்து விட்டு, உடலை ஒப்படைத்துவிடலாம்.
டாக்டர் சுதா சேஷையன்
தலைவர், உடற்கூறு இயல் துறை, சென்னை மருத்துவக் கல்லுாரி. சென்னை.