தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு


PUBLISHED ON : அக் 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர், 2, 2016: முகிலனின் பெற்றோருக்கு, ஐ.டி., துறையில் வேலை. தாய்வழிப் பாட்டி கண்காணிப்பில் வளர்கிறான். கான்கிரீட் கட்டடங்களாகிவிட்ட நகர அமைப்பில், அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பெயருக்கு கூட மரங்கள் கிடையாது. காற்று இல்லாமல் புழுக்கமாக இருப்பதால், மூன்று வயது முகில், டிரஸ் போடுவதே இல்லை. கட்டாயப்படுத்தி போட்டாலும் அழுது அடம்பிடித்து கழற்றிய பிறகு தான் ஓய்வான். உடைகளே இல்லாமல் தரையில் உட்கார்ந்து விளையாடுவது சோபாவிலிருந்து குதிப்பது என்று பயங்கர சேட்டைகள் செய்வான்.

இது போன்ற அவனது செயல்களால், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று ஏற்பட்டதால், முகிலை அவனது அம்மா மற்றும் பாட்டி என்னிடம் அழைத்து வந்திருந்தனர். 'சிறுநீர் கழிக்கும் போது அழுகிறான்' என்று சொன்னார்கள்; பரிசோதித்தேன். பிறப்புறுப்பில் நோய்த் தொற்று ஏற்பட்டு லேசாக சீழ் பிடித்திருந்தது. அவனை பரிசோதிக்கும் போது, என்னை ஒருவழி பண்ணிவிட்டான். 'வலிக்குது விடுங்க. அப்பாவிடம் சொல்லுவேன், மிஸ் கிட்ட சொல்வேன்' என்று மிரட்டல் வேறு. அவன் பேசுவதை ரசித்துக் கொண்டே பிறப்புறுப்பில் சீழ் பிடித்திருந்ததை சுத்தம் செய்து அனுப்பினேன்.

அடிக்கடி வெந்நீரில் சுத்தம் செய்த பின் ஒரு வாரம் கழித்து வாருங்கள் அவனுக்கு, 'சர்க்கம்சேஷன்' (Circumcision) அதாவது பிறப்புறுப்பின்

முன் தோலை அகற்ற வேண்டும் என்றேன். இப்படி அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுவது, சிறுநீர் வெளியேறும் துளை இல்லாமல் மூடியவாறு இருப்பது, புண், தோல் அரிப்பு போன்ற காரணங்களுக்காக செய்யப்படும் ஒரு சிறு அறுவை சிகிச்சை. இதை, மத ரீதியாகவும் செய்வார்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னும் குழந்தையின் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது நல்லது. இச்சிகிச்சையை மருத்துவமனையில் வைத்து லேசான மயக்க மருந்து கொடுத்து, 'டேகேர்' முறையிலேயே செய்யலாம். பிறப்புறுப்பில் முன் தோலை அகற்றிய பிறகு அங்கு 'அப்சாபபிள்' எனப்படும் நுாலினால் தையல் போடப்படும். இத்தையலை பிரிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை; அதுவே உதிர்ந்து விடும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தி மருந்து தடவ வேண்டும். சரியாக, 5 முதல், 7 நாட்களுக்குள் சரியாகிவிடும். முகிலுக்கும் இச்சிகிச்சை செய்தேன். பின் அவனது அம்மாவிடம், குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் கால் சட்டையாவது அணிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

ரா.சபரீசன்,

பொது அறுவை சிகிச்சை நிபுணர்

சென்னை. 98947 76705


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us