தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாள் முழுக்க பாதுகாப்பு தரும் கவசம்!

நாள் முழுக்க பாதுகாப்பு தரும் கவசம்!

நாள் முழுக்க பாதுகாப்பு தரும் கவசம்!


PUBLISHED ON : செப் 21, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கொரோனா' தொற்று வந்ததிலிருந்து, எல்லாருடைய வாயிலிருந்து வரும் வார்த்தை, 'சானிடைசர்!' கிருமி நாசினியாக செயல்படும் இந்த கெமிக்கல் தயாரிப்பு, பக்க விளைவுகளை கொண்டதாகும். சோப்பு போட்டு கைகளை கழுவுவது சிறந்த முறை.

சோப்பு இல்லாத இடத்தில், சானிடைசரை பயன்படுத்தலாம். ஆனால், 'தொடர்ந்து பலமுறை பயன்படுத்துவதால், உடலில் வேறு சில பாதிப்புகள் வரக்கூடும்' என்று எச்சரிக்கின்றனர், மருத்துவ விஞ்ஞானிகள்.

குறிப்பாக, 'தைராய்டு, கல்லீரல் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கைகளை சானிடைசரால் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டாம்' என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

'இதற்கு மாறாக, பக்க விளைவு தராத சானிடைசர் உண்டா?' என்ற கேள்விக்கு, என் பதில், 'உண்டு...' என்பது! அது என்ன?

நம் நாட்டு மூலிகையில், முதல் மூலிகையாக திகழும், வேப்பிலை தான், அந்த மூலிகை சானிடைசர். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மாவிலைகள் ஆகிய இந்த மூன்றையும் உலர்த்தி, மிஷினில் அரைத்து, பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

தினசரி காலையில் குளிப்பதற்கு முன், மேற்படி தயாரித்த பொடியில் ஒரு பிடி எடுத்து, ஒரு குடம் கொதி நீரில் போட்டுக் காய்ச்சுங்கள்; 15 நிமிடம் நன்கு கொதித்த பின், இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து, இறக்கி ஆற வையுங்கள். இது தாங்க மூலிகை சானிடைசர்.

இது நன்கு ஆறிய பின், சம அளவு தண்ணீர் கலந்து, வீட்டில் வையுங்கள். தேவைப்படும் போது, இதன் மூலம் கை, கால், முகத்தை கழுவ வேண்டும். அடிக்கடி இதை கொண்டு நன்கு கழுவி வரலாம்; சோப்பைத் தவிர்க்கவும். ஒரு நாளைக்கு ஆறு முறை இதை கொண்டு கழுவி விட, இது மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும்.

காலையில் பல் துலக்கும் போது, இதைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம் அல்லது குளிக்க விரும்பினால், ஒரு குடம் தண்ணீரில், இதைக் காய்ச்சி அதே அளவு தண்ணீர் கலந்து, சூடு பொறுக்குமளவில் குளிக்கலாம்; ஆனால், சோப்பு உபயோகிக்கக் கூடாது.

இப்படி செய்யும்போது வேப்பிலை, மஞ்சள் கலந்த கஷாய தண்ணீர் உடம்பில் ஊறி, வியர்வை துளி வழியே, தோலின் புறத்துளை வழியாக, சிறிதளவு உள்ளே செல்லும்.

இதுதாங்க அன்று முழுவதும் நமக்கு பாதுகாப்பு தரும் கவசமாகப் பயனாகிறது. அதனால், இந்த மூலிகை சானிடைசரை தினசரி வாய் கொப்பளிக்க வும், முகம், கை, கால் கழுவி குளிக்கவும் பயன்படுத்தினால், கொரோனா வைரஸ் மட்டுமின்றி, கொசுக் கடியால் வரும், 'டெங்கு' காய்ச்சலையும் தடுக்கலாம்.

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடம்பில் வேப்பிலையின் சாரம், தோலுக்கு அடியில் படிந்து, கிருமிகளின் நஞ்சை முறித்து விடும். இந்த நிலையில், 'கொரோனா நஞ்சு' தொற்றாது தடுக்கப்படும்.

ஒரு மாதம் உபயோகித்த பின், கொசு கடித்தால் கொசுக் கடி நஞ்சு முறிக்கப்படுவதுடன், எதிர்விளைவாக கடித்த கொசு, சில நிமிடங்களில் மடிந்து போவதைக் காணலாம்.

இவ்வாறாக, இந்த மூலிகை சானிடைசர் தயாரித்து பயன்படுத்தி வர, வைரஸ் நோய்களில் இருந்து தப்பலாம். இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என்பது தான், இதன் தனி சிறப்பு!

டாக்டர் மூலிகைமணி க.வேங்கடேசன்,

சித்த மருத்துவர், சென்னை

73388 23784


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us