sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தீர்வை கூகுளில் தேடுவது சரியில்லை!

தீர்வை கூகுளில் தேடுவது சரியில்லை!

தீர்வை கூகுளில் தேடுவது சரியில்லை!


PUBLISHED ON : செப் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண் பார்வை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 'எட் விஷன்' என்ற தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, சமூக வலைதளங்கள் வாயிலாக துவக்கி உள்ளோம்.

'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப்' போன்ற சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் இதில், ஆர்வம் உள்ள அனைவரும் இணைந்து, கண் பார்வை, கண் கோளாறுகள், கண் நோய்கள் குறித்த சந்தேகங்களை, நேரடியாக டாக்டர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கண்கள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வையும், சரியான தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தால், பிரச்னையை எதிர்கொள்ளும் போது, 'என்ன செய்யலாம், சிகிச்சைக்கு எங்கு செல்லலாம்' என்பது பற்றி, சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

கண்களின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் அனைவரும், அவரவர் இருப்பிடத்தில் இருந்தபடியே விளக்கங்களை பெற முடியும்.

பிரச்னை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற அபிப்பிராயம் தான், நம்மில் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. அதிலும், சில ஆண்டுகளாக பரிசோதனை முடிவுகளையும் சரி, கண்களில் வழக்கத்தற்கு மாறாக ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தாலும், உடனடியாக கூகுளில் தேடுவது வாடிக்கையாகி விட்டது.

மருத்துவ ஆலோசனைக்கு வரும் போது, 'கூகுளில் படித்தேன்; இந்த அறிகுறிகளுக்கு இது தான் பிரச்னை என்று இருந்தது, சரி தானே டாக்டர்' என்று கேட்கின்றனர்.

கூகுளில் படித்ததை உறுதி செய்வதற்காக, டாக்டரை பார்க்க வருகின்றனரோ என்ற சந்தேகம் வருகிறது. பொதுவெளியில் இருப்பதெல்லாம் பொதுவான தகவல்கள்; அது, தனி மனித பிரச்னைகளுக்கு தீர்வாகாது.

கருவிழி பிரிவின் தலைவர், டாக்டர் சூசன் ஜேக்கப்:

கண்களின் அமைப்பு கேமராவை ஒத்தது. படம் பிடிக்க வேண்டிய பிம்பத்தை மட்டும், 'போக்கஸ்' செய்து, படம் பிடித்து தருவதைப் போன்று, எந்த பொருளை, காட்சியை பார்க்கிறோமோ, அதை கண்களில் உள்ள லென்ஸ், 'கார்னியா' எனப்படும் கருவிழியின் வழியே, விழித்திரையில் விழச் செய்கிறது.

பல காரணங்களால் பார்க்கும் பொருளின் பிம்பத்தின் ஒளி லென்சில் பிரதிபலித்து, விழித்திரையின் மீது சரியாக விழாமல் போகிறது.

விழித்திரையின் முன்பக்கம் விழுந்தால், கிட்டப் பார்வை, பின்பக்கம் என்றால், துாரப் பார்வை போன்ற பார்வை கோளாறுகள் ஏற்படுகின்றன. இவை இரண்டும் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்னை.

இவை தவிரவும், பல பார்வை கோளாறுகள் உள்ளன.

பார்வை கோளாறுகளை சரி செய்ய...

பொதுவாக, பார்வைத் திறனுக்கு ஏற்ப கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ் அணிவது, பார்வை கோளாறுக்கான தீர்வு. கண்ணாடி அணிவதில் பல சிக்கல்கள் உள்ளன.

விளையாடும் போது கீழே விழுந்து உடையலாம்; வியர்வை, வெப்பநிலை மாற்றத்தால், கண்ணாடியின் மீது பனி போல படர்ந்து, பார்வை மங்கலாகலாம்.

குளிர்சாதன வசதியில் நீண்ட நேரம் இருந்து விட்டு வெளியில் வந்தால், கண்ணாடி முழுவதும் புகை அடைத்துக் கொள்ளும். இப்படி, பல நடைமுறை பிரச்னைகள் கண்ணாடி அணிவதில் உள்ளன.

இதற்கு மாற்றாக, கான்டாக்ட் லென்ஸ் அணியலாம் என்றால், அதிலும் சிக்கல்கள் உள்ளன.

எட்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து லென்ஸ் அணியும் போது, கண்கள் வறட்சியாகலாம்; தொற்று ஏற்படலாம். தொடர்ந்து பல ஆண்டுகள் லென்ஸ் பயன்படுத்தினால், கார்னியாவின் மேல்புறத்தில் பாதிப்பை ஏற்படுத்த லாம்; கண்களின் வடிவமே கூட மாறலாம்.

என்ன வகையான லென்ஸ், அதற்கான லோஷன் பயன்படுத்துகிறோமோ அதை மிக கவனமாக, சுத்தமாக பராமரிக்க வேண்டும். லென்ஸ் அணிந்த பின், 'மேக்கப்' போட வேண்டும்; லென்சை அகற்றிய பின் தான், மேக்கப்பை களைய வேண்டும்.

லேசிக் - லேசர்

கண்ணாடி, லென்ஸ் இரண்டிற்கும் மாற்று லேசர் அறுவை சிகிச்சை. 18 வயதிற்கு மேல், 'பவர்' எனப்படும், கண்களின் பார்வை திறன் ஸ்திரமான பின் லேசர் செய்யலாம்.

பார்வை கோளாறு உள்ள அனைவரும் லேசர் அறுவை சிகிச்சை செய்து கொள்வது சாத்தியமில்லை. கார்னியாவின் அடர்த்தியை பொருத்தே முடிவு செய்ய முடியும். இதில், கார்னி யாவின் வடிவத்தை மாற்றுவ தால், பார்க்கும் பொருளின் பிம்பம் நேரடியாக விழித்திரையில் விழுகிறது.

கடந்த, 40 ஆண்டுகளாக இந்த முறை நடைமுறையில் உள்ளது. துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். லேசிக் அறுவை சிகிச்சையின் அடிப்படை ஒரே மாதிரி இருந்தாலும், இதிலும் நவீன, மேம்படுத்தப்பட்ட பல முறைகள் வந்து விட்டன.

பல்வேறு காரணங்களால் லேசர் அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு, லென்சை கண்களுக்கு உள்ளேயே பொருத்தும் பல நவீன முறைகள் உள்ளன.

லேசர் அறுவை சிகிச்சையில் எந்த முறையாக இருந்தாலும், கார்னியாவின் வடிவத்தை மாற்றி, பார்வை கோளாறை சரி செய்வது தான். திருமணம் முடிவான பின் பல பெற்றோர், 'இன்னும் ஒரு மாதத்தில் என் பெண்ணுக்கு திருமணம். கண்ணாடி அணிய விருப்பமில்லை; உடனடியாக ஏதாவது செய்ய முடியுமா' என்று வருகின்றனர்.

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தில் தாராளமாக செய்யலாம். அறுவை சிகிச்சை செய்த பின், அடுத்த இரண்டு நாட்கள், கண்களில் ஏதோ நடந்திருக்கிறது என்ற உணர்வு இருக்கும்; அவ்வளவு தான். அதன் பின், இயல்பான வேலைகளை செய்ய முடியும்.

நடிகை ரெஜினா

விளையாட்டில் ஆர்வம் அதிகம். விளையாடும் போது அடிக்கடி கண்ணாடியை உடைத்து விடுவேன். ஆண்டிற்கு ஆறு முறை புதிய கண்ணாடி வாங்க வேண்டும். சரி, லென்ஸ் அணிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். லென்சை சுத்தம் செய்வது பெரிய பிரச்னையாக இருந்தது.

பள்ளியில் இருந்து வந்ததும் லென்சை கழற்ற மாட்டேன். வெளியில் எங்காவது சென்றால், சமயங்களில் அங்கேயே துாங்கி விடுவேன். அந்த நேரத்தில் லென்சை கழற்றி வைக்க, அதற்கான பெட்டியை எடுத்துச் செல்ல மறந்து விடுவேன்.

அதனால், கண்களில் தொற்று ஏற்பட்டு விட்டது. சரி கண்ணாடியே அணிந்து கொள்ளலாம் என்றால், மூக்கில் லேசாக கறுப்பு நிறத்தில் தழும்பு வந்து விட்டது; அதுவும் பிடிக்கவில்லை. இது நடந்தது, 15 ஆண்டுகளுக்கு முன்.

நடிகையான பின், நிறைய கிளிசரின் பயன்படுத்த வேண்டிய நிலை. அடிக்கடி கண்கள் வறண்டு விடும். சொட்டு மருந்தும், கையுமாகவே இருப்பேன். அதன்பின், அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தேன்.

'ஸ்மைல்' என்ற முறையில் லேசிக் அறுவை கிச்சை செய்யப்பட்டது. நீண்ட பரிசோதனைகளுக்கு பின் செய்யப்பட்டது. தனியாக இருட்டறையில் மிகப் பெரிய இயந்திரம் மட்டும் இருந்தது.

பார்க்கவே பயம் வந்து விட்டது. என்னுடைய அனுபவம், நம் பயத்தை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளும் டாக்டரிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்பது தான்.

நமக்கு பொருத்தமான மருத்துவமனை, டாக்டரை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான், ஏதோ ஒன்று நமக்கு நடக்கிறது; என்ன ஆகுமோ என்ற பயம் இல்லாமல், நமக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கப் போகிறது என்ற தெளிவு ஏற்படும்.

லேசிக் பற்றி நானும் கூகுள் வலைதளத்திற்கு சென்று, நிறைய தெரிந்து கொண்டேன். ஆனால், என்னுடைய கார்னியாவின் அடர்த்தி என்ன என்பது போன்ற தொழில்நுட்ப விபரங்களை, டாக்டர் பரிசோதனை செய்து தான் சொல்ல வேண்டும்.

அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொள்ள கூகுள் உதவுமே தவிர, சம்பந்தப்பட்ட வல்லுனர் தான் தீர்வு தர முடியும். லேசிக் சிகிச்சைக்கு பின், கண்களின் வறட்சி போய் விட்டது.

டாக்டர் அஸ்வின் அகர்வால்,

அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை

94444 44822, 044 - 4300 8800


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us