PUBLISHED ON : ஆக 18, 2024

டாக்டர் விஜய் விஸ்வநாதன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர், எம்.வி. ஹாஸ்பிட்டல் பார் டயாபடிக், சென்னை.
நான்கில் ஒரு சர்க்கரை நோயாளி, பாதங்களில் புண், கால்கள் மரத்துப் போவது, ரத்த நாளங்களில் கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு, விழித்திரை நரம்புகள் பாதிக்கப்படும் டயபடிக் ரெடினோபதி போன்ற பிரச்னைகளள் வரும் அபாயமும் இருப்பது தெரிய வந்துள்ளது.
என்னுடைய தலைமை யில் நாடு முழுதும் 23 மாநிலங்களில், பாதங்களின் பாதுகாப்பு குறித்த ஆயவு நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச அளவில் முதல் முறையாக எங்கள் ஆய்வில், 54,000 பேர் பங்கு பெற்றனர். இவர்களில், 75 சதவீதம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள். 68.7 சதவீதம் பேர் ஆண்கள் இதயம், கண்கள், கல்லீரல் என்று நாம் பிரதானமாக நினைக்கும் உறுப்புகளுக்கு தரும் பாராமரிப்பை கால் பாதங்களுக்கு தருவதில்லை. இதனாலேயே பாதங்கள் பாதிக்கப்படுவது அதிகம்.
டைப் 2 சர்க்கரை கோளாறால் கால் பாதங்களில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, கால்களை இழக்கும் அபாயமும் உள்ளது.
தங்களிடம் ஆலோசனைக்கு வரும் நோயாளியிடம் அவரின் சர்க்கரை கோளாறு பற்றிய விபரங்களை கேடபது, பாதங்களை பரிசோதனை செய்வது, எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனை தருவது ஆகிய மூன்று விஷயங்களுக்கும் தலா ஒரு நிமிடம் நேரத்தை செலவிட்டால் இப்பிரச்னையை பெருமளவு தவிர்க்க முடியும் என்பது தான் எங்கள் ஆய்விலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்.
இந்த ஆய்வுக் கட்டுரை சர்வதே மருத்துவஇதழான பிஎம்ஜே-பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளி வந்துள்ளது.
டாக்டர் விஜய் விஸ்வநாதன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர், எம்.வி. ஹாஸ்பிட்டல் பார் டயாபடிக், சென்னை