sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : ஆக 18, 2024

Google News

PUBLISHED ON : ஆக 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவிதா, மதுரை: அல்சர் காரணமாக தொண்டை புண் ஏற்படுகிறது என்பது சரியா.

அல்சருக்கும் தொண்டை புண்ணிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இரவில் தாமதமாக அதிக உணவு சாப்பிட்டு உடனடியாக துாங்கச் செல்லும் போது செரிமானத்திற்காக வயிற்றில் அமிலம் சுரந்து அது உணவுக்குழாய் மூலம் தொண்டைக்கு வந்து சேரும். அமிலம் இரைப்பையில் மட்டும் தான் இருக்க வேண்டும். அது தொண்டைக்கு வந்தால் அரிக்க ஆரம்பித்து விடும். தொண்டையில் அரிப்பு ஏற்பட்டு புண் வரும்.

தொண்டையில் தொற்று ஏற்பட்டது என ஆன்டிபயாடிக், வலி நிவாரண மாத்திரை பயன்படுத்தும் போது மீண்டும் அல்சர் அதிகரிக்கும்.

இரைப்பையில் இருந்து அமிலம் கிளம்பி உணவுக்குழாய் மூலம் தொண்டையில் மட்டுமல்ல மூச்சுக்குழாய்க்கும் ஸ்பிரே ஆகும். அது நுரையீரலுக்கு சென்று வறட்டு இருமல் ஏற்படும். சிலருக்கு குரலில் கூட மாற்றம் வரும்.

இந்த பிரச்னைகளை தடுக்க இரவில் ஏழு மணிக்குள் சாப்பிடுவது நல்லது. அதுவும் மிதமாக சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிட்டதற்கும் துாங்குவதற்குமான இடைவெளி நேரம் 2 முதல் 3 மணி நேரம் இருக்க வேண்டும்.

- டாக்டர் சரவணமுத்துகாது மூக்கு தொண்டை நிபுணர் மதுரை

ரிச்வானா பானுகோபால்பட்டி: முகத்தில் அடிக்கடி தேமல் , படை வருகிறது. இதை வராமல் தடுப்பது எப்படி?

தோலின் முக்கியமான வேலை நமது உள் உறுப்புகளை வெயில், காற்று , கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது. அதே காரணத்தால் தோல் அதிகமாக தாக்கப்பட்டு பல்வேறு நோய்களும் வர காரணமாகிறது. அவ்வாறாக வரும் நோய்களில் முதன்மையாது பூஞ்சை. மருத்துவத்தில் போட்டோ-ஏஜிங் என்று அழைக்கப்படும் இதை மருத்துவ தர சன்ஸ்கிரீன்கள், வைட்டமின் ஏ கொண்ட நைட் க்ரீம் பராமரிப்பு முறையை மேற்கொள்வதன் மூலம் தடுக்கலாம்.

- டாக்டர் ராஜாஅரசு ஓய்வு மருத்துவர்கோபால்பட்டி



ஆர்.பிரேம்குமார், கூடலூர்: எனக்கு 52 வயதாகிறது. குளிர்காலம் துவங்கியவுடன் கால் தசையில் அதிகம் வலி ஏற்படுகிறது. காரணம் மற்றும் தீர்வு கூறுங்கள்.



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் வலி ஏற்படும். குறிப்பாக குளிர்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாகும் போது கால் வலி அதிகரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்களுக்கும், எலும்பு தேய்மானம் இருந்தாலும் இது போன்ற வலி ஏற்படும். இதற்கு தீர்வாக, வைட்டமின் சி சத்துள்ள உணவு வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். சுடு தண்ணீரில் ஒத்தடம் கொடுப்பது நல்லது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்க வேண்டும். ஏ.சி., அறையில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும். பல மாதங்கள் ஒரே செருப்பை அணிவதை தவிர்க்க வேண்டும்.

டாக்டர் பூர்ணிமாஅரசு மருத்துவர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூடலுார், தேனி


ஆர்.பார்த்திபன்ராமநாதபுரம்: தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறேன். இதற்கான தீர்வு என்ன.

காய்ச்சல், தலைவலி, மூக்கு வழிதல், சளி, தும்மல், உடல் வலி காணப்பட்டால் உடனடியாக கை வைத்தியம் செய்வதை கைவிட வேண்டும். அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவுக்கு சென்று காய்ச்சலுக்கு நில வேம்பு கஷாயம், பிரம்மானந்த பைரவா மாத்திரை, தாளிச்சாதி சூரணம் போன்றவற்றை டாக்டர் பரிசோதனைக்குப் பின் பெற்று பயன் படுத்தலாம்.

மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். என்ன வகை காய்ச்சல் என்பதை தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும். மழைக்காலத்தில் டெங்கு, டைபாய்டு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் பரவும். இதில் எது என கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நிலவேம்பு கஷாயம் எடுத்துக் கொள்ளலாம். மழைக்காலம் என்பதால் நமது சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

- டாக்டர் ஜி. புகழேந்திசித்தா மருத்துவர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்



எஸ்.சரண்யா,சிவகங்கை: குழந்தைக்கு எந்த வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்


குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பின்னர் இணை உணவை தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இரண்டு வயது ஆகும் வரை தாய்ப்பால் தருவது நல்லது. தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தருகிறது. குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கவும் மூளை வளர்ச்சி மேம்படவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் சீம்பால் அதீத சத்து உடையது. இதை தவறாமல் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் தாய்ப்பால் இல்லாமல் வேறு ஏதாவது உணவை கொடுத்தால் அது குழந்தையின் ஜீரண சக்தியை பாதிக்கும். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள பிணைப்பு அதிகரிக்கிறது. பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் பிரசவத்தின் போது ஏற்படும் அதித ரத்த போக்கினை இது கட்டுப்படுத்தும். கர்ப்பப்பை சுருங்க உதவும். தாயின் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும்.

- டாக்டர் எஸ்.ஆர்.ராஜா

உதவி பேராசிரியர் குழந்தைகள் நலத்துறை

அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை


முத்துக்குமரன், சிவகாசி: எனக்கு 30 வயதாகிறது. பாலிபேக் கம்பெனியில் வேலை செய்கிறேன். அடிக்கடி தோல் அலர்ஜி , அரிப்பு வருகின்றது. தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.

பொதுவாக பேக்டரி, பிரின்டிங் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு கோடைகாலத்தில் தோல் அலர்ஜி, அரிப்பு இயல்பாக வரும். நல்ல காற்றோட்டமான இடம் மிகவும் அவசியம். வேலை செய்யும் இடத்தில் வெளிக்காற்று வராமல் இருந்தால் தோல் அலர்ஜி, அரிப்பு கண்டிப்பாக வரும். எப்பொழுதுமே காட்டன் உடைகள் அணிந்து வேலை செய்வது நல்லது. தவிர கையுறை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் முடிந்த வரையும் தற்காப்பு உடைகள் அணிந்து கொள்ள வேண்டும். வேலை முடிந்த உடன் கைகளை கழுவ வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் குளிப்பது நல்லது. தொடர்ந்து கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

- அய்யனார், தலைமை டாக்டர் அரசு மருத்துவமனை, சிவகாசி






      Dinamalar
      Follow us