தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வைரஸ் தொற்றுக்கு வாழ்நாள் முழுதும் பாதுகாப்பு தரும் தடுப்பூசி

வைரஸ் தொற்றுக்கு வாழ்நாள் முழுதும் பாதுகாப்பு தரும் தடுப்பூசி

வைரஸ் தொற்றுக்கு வாழ்நாள் முழுதும் பாதுகாப்பு தரும் தடுப்பூசி


PUBLISHED ON : செப் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீப காலமாக வாழ்க்கை முறை, உணவு முறையில் மாற்றம் காரணமாக, கல்லீரல் நோய் அதிகரித்து வருகிறது. அதில் பிரதானமானது ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பு.

ஹெபடைடிஸ் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்களில் பல வகைகள் இருந்தாலும், ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ பொதுவானவை.

ஹெபடைடிஸ் ஏ, இ அசுத்தமான உணவு, தண்ணீரின் வாயிலாக பரவுகின்றன. மற்ற மூன்று வைரஸ்கள் பி, சி, டி ஆகியவை பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பரவும். பிரசவத்தின் போது தாயிடமிருந்து குழந்தைக்கு, பாதுகாப்பற்ற ஊசி, ரத்த மாற்றம், காயங்கள், பாதுகாப்பற்ற உடலுறவு போன்றவற்றால் பரவுகிறது.

பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய ரேசர்கள், பிரஷ் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

குழந்தை பருவத்தில் ஹெபடைடிஸ் பி பாதிப்பால் சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, வைரசை அழிக்கும் திறன் இருக்காது.

நாளடைவில் கல்லீரல் கேன்சராக மாறவும் வாய்ப்பு உள்ளது.

ஆரம்ப நிலையில் ஹெபடைடிஸ் சி பாதிப்பால் எந்த அறிகுறிகளும் தெரியாது. அதை, மருத்துவ பரிசோதனையில் மட்டுமே கண்டறிய முடியும்.

கல்லீரல் பாதிப்பு தவிர, ஹெபடைடிஸ் பி தொற்று தோல் வெடிப்பு, ரத்த சோகை, ரத்த நாளங்கள், மூட்டுகள், சிறுநீரகம் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சோர்வு, வயிற்று வலி, உடல் வலி, காய்ச்சல், குமட்டல் ஆகியவை பொதுவான அறிகுறிகள். தீவிர பாதிப்பு இருந்தால், நிறம் மாறிய சிறுநீர், கண்களில் மஞ்சள் நிற மாற்றம், கால் வீக்கம், வயிறு இறுக்கம், ஈறுகளில், மூக்கில் ரத்தப்போக்கு, துாக்கக் கலக்கம் மற்றும் கோமா ஏற்படலாம்.

நாள்பட்ட ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பிற்கு, என்டெகாவிர், டெனோபோவிர் போன்ற வாய்வழி மருந்துகள் தரப்படுகின்றன.

இந்த மருந்துகளை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளும்போது, அவை குறைவான பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். இருப்பினும், அவை அனைவருக்கும் பலன் தருவதில்லை. எனவே, சில நோயாளிகள் அவற்றை வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

உலக சுகாதார மையத்தின் பரிந்துரை மற்றும் 1985ம் ஆண்டு முதல் நம் நாட்டில் உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தின்படி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் போட வேண்டியது கட்டாயம். அதன்பின், 6, 10, 14 வாரங்களில் மூன்று டோஸ், டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டனஸ் மற்றும் புளு தடுப்பூசிகளுடன் சேர்த்து தரப்படுகின்றன.

ஹெபடைடிஸ் பி தடுப்பூசி குறைவான பக்க விளைவு உள்ளது; வாழ்நாள் முழுதும் 95 சதவீதம் பாதுகாப்பு தரும்.

டாக்டர் ஜாய் வர்கீஸ், கல்லீரல், பித்தப்பை மாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குனர், கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை, சென்னை. 79969 89196infochn@gleneagleshospitals.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us