தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அலோபதி: நன்றி சொல்ல வேண்டும் உங்கள் கண்களுக்கு....

அலோபதி: நன்றி சொல்ல வேண்டும் உங்கள் கண்களுக்கு....

அலோபதி: நன்றி சொல்ல வேண்டும் உங்கள் கண்களுக்கு....


PUBLISHED ON : ஜூன் 24, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.

கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

அதற்கு சில ஆலோசனைகள்:

* காலையில், சூரிய உதயத்துக்கு முன், எழுந்து கொள்ளுங்கள். வாய் நிறைய தண்ணீரை நிரப்பி, கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்கு, கைகளால் தண்ணீரை, கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர், சூடாகவும் இருக்கக் கூடாது; குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.

* வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகு, உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே, கண்ணையும், முகத்தையும், தண்ணீரால் கழுவலாம்.

* தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொருட்டு, அதிக நேரம் அதை உற்றுப் பார்க்காதீர்கள். கண்களுக்குத் தேவை யான அளவு, கண் சிமிட்டுவது அவசியம்.

* கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.

* அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும்.

* இரவு அதிக நேரம் கண் விழித்திருத்தல், சூரிய உதயத்துக்குப் பின்னும் தூங்கிக் கிடத்தல் ஆகியவை, கண்ணுக்கு ஊறு விளைவிக்கும்.

* தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம்.

* கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில், நாளொன்றுக்கு 10 முறை அசைத்து, பயிற்சி செய்தால், கண் தெளிவாக இருக்கும். 10 முறை, கண்ணைச் சுழற்றவும் வேண்டும்.

* கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

* ஒரு ஸ்பூன் திரிபலா சூர்ணத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். காலையில், தண்ணீரை வடிகட்டி எடுத்து, அந்தத் தண்ணீர் மூலம் கண்ணைக் கழுவினால், கண் பிரகாசமாக இருக்கும்.

* குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகி யவை, கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், கண் பார்வை, தெளிவாக இருக்கும்.

கண்ணுக்கு மையழகு!

* பன்னீரில், விளக்கெண்ணெயை கலந்து, பஞ்சில் தோய்த்து, கண் மீது வைத்து, 15 நிமிடம் ஊற வேண்டும். கண் எரிச்சல் மறையும்.

* வடிகட்டிய டீ தண்ணீரில், பஞ்சைத் தோய்த்து கண்ணில் வைத்தாலும், கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

* கரிசலாங்கண்ணிக் கீரையில் தயாரித்த மை, கண்ணுக்கு, அழகும், குளிர்ச்சியும் சேர்க்கும்.

* கண்ணை மூடியபடி, வெள்ளரிச் சாறால், கண்ணைக் கழுவலாம்; பஞ்சில் தோய்த்தும், 10 நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

* தக்காளிச் சதை, மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு, கடலை மாவு ஆகியவற்றை, பசை போல கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது பரப்பி, இரண்டு மணி நேரம் ஊறலாம். தூங்கும் நேரத்தில் செய்தால், உங்களுக்கு வசதி. வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வர, கரு வளையம் மறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us