தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடல் எடையை தெரிந்து கொள்ள ஒரு, 'ஆப்'!

உடல் எடையை தெரிந்து கொள்ள ஒரு, 'ஆப்'!

உடல் எடையை தெரிந்து கொள்ள ஒரு, 'ஆப்'!


PUBLISHED ON : ஜன 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குண்டாக இருக்கும் குழந்தைகளைப் பார்த்தால், 'இவங்க எப்படி இவ்வளவு குண்டாக இருக்காங்க... எப்படி தான் இப்படி சாப்பிட்டுட்டே இருக்காங்களோ... ' என்று தான் எனக்கு தோன்றும்.

உயரத்திற்கு தகுந்த மாதிரி உடல் எடையுடன் இருப்பது தான் ஆரோக்கியம் என்று, என் அம்மா சொல்லி தந்திருக்காங்க.உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் தான் இருக்கிறோமா என்று அடிக்கடி, 'செக்' செய்து கொள்வதற்காக, இந்த ஆப்பை உருவாக்கினேன்.இதை, மொபைல் போனில் தரவிறக்கம் செய்தால், உயரம், எடை, இதய துடிப்பு அளவை தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் பொதுவான, 'ஆப்' இது.என் பள்ளியில், 'ஆப்' உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தனர். அதில் தேவையான மாற்றங்கள் செய்து, இதை உருவாக்கினேன்.என் வகுப்பு மாணவர்கள், 'மொபைல் போனையே எல்லா நேரமும் பார்க்கின்றனர். இதனால், கண் பார்வை பாதிக்கப்படும்.விளையாடாமல் உட்கார்ந்தே இருந்தால், குண்டாகி விடுவோம். எனக்கு விளையாடப் பிடிக்கும். கிரிக்கெட், டென்னிஸ் விளையாடுவேன். 'சாப்பிட்டுட்டே இருக்காதீங்கடா... எக்சர்சைஸ் பண்ணலாம் வாங்க'ன்னு வகுப்பு தோழர்களிடம் சொன்னால், 'போடா, உனக்கு வேற வேலை இல்லை'ன்னு சொல்றாங்க... எனக்கு குண்டாக இருக்க ஆசையே இல்லை. ரொம்ப குண்டானா, உடம்புல கொழுப்பு அதிகமாயிடும்.

என் அப்பா, சி.என்.ரமேஷ், மென்பொறியாளர். அவர் கம்ப்யூட்டரில், 'புரோகிராம்' எழுதும் போது பார்ப்பேன். எனக்கும் ஆசையாக இருக்கும். வகுப்பில் கற்றுக் கொண்டதுடன் சேர்த்து, அப்பாவிடமும் சில விஷயங்களை தெரிந்து இதை உருவாக்கினேன்.எனக்கு பிடித்தது கணக்கு பாடம். விஞ்ஞானியாக வேண்டும் என்பது தான் என் விருப்பம். அனைவரும் எளிதாக பயன்படுத்தும் விதத்தில், ரோபோக்களை உருவாக்குவேன்.'ஆப்' உருவாக்கியதற்கு பள்ளியில் எல்லாரும் பாராட்டினர்; சந்தோஷமாக இருந்தது.

சி.பி.சாஜன் ரமேஷ்,

ஐந்தாம் வகுப்பு,

நாசரேத் அகாடமி - சி.பி.எஸ்.இ.,

காமராஜ் நகர், சென்னை

universalhealthapp Pro

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us