தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/என்றும் பதினாறு

என்றும் பதினாறு

என்றும் பதினாறு


PUBLISHED ON : ஜூலை 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிலருக்கு, வயது அதிகமாக இருந்தாலும், அவர்களை பார்த்தால், நிச்சயமாக தெரியாது. காரணம், அவர்கள் மேற்கொள்ளும் உணவு முறை, உடற்பயிற்சிகளும் தான். வாழ்க்கையில், சில விஷயங்களை முறையாக கையாண்டால், இளமை என்றும் நீடித்திருக்கும்.

பதினாறு வயதுக்கு மேல், கொலாஜன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அவை தான், சருமத்துக்கு, நெகிழ்வுத் தன்மையை கொடுத்து, சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கின்றன.

வயதாகும் போது, இதன் உற்பத்தி குறையும். நீண்ட நாட்கள் தக்க வைக்க வேண்டும் என்றால், புரோட்டின் மற்றும் நார்சத்து கொண்ட உணவுகளை உண்ணும்போது, கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும்; சருமமும், வறட்சி குறையாமல் இருக்கும். எந்தெந்த உணவுகளில், புரோட்டினும், நார்சத்தும் அதிகளவில் உள்ளன, என்பதையும் பார்ப்போம்.

பெர்ரி பழங்கள்: அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களைக் கொண்டுள்ளன. நார்சத்தும், அதிகமாக உள்ளன. இப்பழத்தை உண்டால், நச்சுகள் வெளியேறி, சருமம் அருமையாக இருக்கும்.

நீர்: குடிநீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயம், தாகம் வந்தால் தவிர, நீரை நினைத்து கூட பார்ப்பதில்லை. அவ்வப்போது, சிறிது இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும். நச்சுக்களும், வேண்டாத கழிவுகளும் வெளியேற, நீர் அருமருந்து.

சிவப்பு திராட்சை: நிறைய ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இளமையை அதிகரிக்க செய்யும் ஆற்றல், சிவப்பு திராட்சைக்கு உள்ளது. வைட்டமின் சியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டை விட, இந்த சிவப்பு திராட்சையில் 50 மடங்கு அதிகம் உள்ளது.

காலே கீரை: அற்புதமான நற்பலன்களை கொண்டுள்ளது. வாரம் மூன்று முறையாவது, உணவிலோ அல்லது சாறு தயாரித்தோ எடுத்துக்கொள்ளலாம்.

சருமத்தின் திசுக்களில் ஏற்படும் பிரச்னைகளை சீர் செய்து சரிபடுத்தி விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us