ஆப்பிளும், வெண்ணெயும் சர்க்கரையை கட்டுப்படுத்தும்!
ஆப்பிளும், வெண்ணெயும் சர்க்கரையை கட்டுப்படுத்தும்!
PUBLISHED ON : ஆக 21, 2022

சர்க்கரை கோளாறு வரும் வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே கோளாறு உறுதியாகி, அதை நிர்வகித்து வருபவர்கள் என்று அனைவருக்கும், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம். நீண்ட நாட்களுக்கு, சீரற்ற ரத்த சர்க்கரை இருந்தால், இதயக் கோளாறு, கண் பாதிப்பு, கால்கள், தோல், சிறுநீரகங்கள் என்று உடலின் எந்த உறுப்பும் பாதிக்கப்படலாம்.
சர்க்கரை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், சாப்பிடும் உணவு மெதுவாக செரிமானம் ஆகி, ரத்த குளூக்கோஸ் அளவு சீராக, நிதானமாக அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் அந்த உணவில் தேவையான அளவு நுண்ணுாட்டச் சத்துக்களும், புரதமும் இடம் பெறுவது அவசியம்.
அப்படிபட்ட உணவு தான் ஆப்பிளும், 'பீ நட் பட்டர்' எனப்படும் வேர்க்கடலையில் தயாராகும் வெண்ணெயும். ஆப்பிளில் நிறைய நார்ச்சத்து உள்ளது; வேர்க்கடலை வெண்ணெயில், கொழுப்பும், புரதமும் தேவையான அளவு இருக்கிறது. புரதம் செரிமானம் ஆவதற்கு, நான்கு மணி நேரமாகும்.
வெண்ணெயில் இருக்கும் கொழுப்பு செரிமானம் ஆவதற்கும் நீண்ட நேரம் பிடிக்கும். செரிமானம் ஆகும் போது, நார்ச்சத்தில் உள்ள மூலக்கூறுகள் குளூக்கோசாக மாறாது. எனவே, ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க, இது மிகப் பொருத்தமான உணவு.
- ஜோஸ்டின் நீரிழிவு மையம்,
பாஸ்டன், அமெரிக்கா.