PUBLISHED ON : ஆக 14, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடல் எடையை அதிகரிக்க விரும்பும் சுமோக்கள், இரவு உணவை 10:00 மணிக்கு மேல் தான் சாப்பிடுவர். அதேநேரம், பெரும்பாலான சீனர்கள் ஒல்லியாக இருப்பதற்கு காரணம், மாலை 6:00 - 7:00க்குள் இரவு உணவை முடித்துக் கொள்கின்றனர்.
வாரத்தில் எத்தனை நாட்கள் கார்போஹைட்ரேட் அதிகம் சாப்பிடுகின்றனரோ, அன்று அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு நடந்தே செல்லும் பழக்கமும் அவர்களிடம் உள்ளது.
மாலை 6:00 மணிக்கு மேல் கஞ்சி, சூப் என்று மிதமான உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. இரவு வெகுநேரம் கழித்து சாப்பிட வேண்டிய நிலை வந்தால், பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது; அவை எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
- 'நேச்சுரோபதி' இதழ்