தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வைட்டமின் "இ' மாத்திரை நல்லதா?

வைட்டமின் "இ' மாத்திரை நல்லதா?

வைட்டமின் "இ' மாத்திரை நல்லதா?


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

* ஆர்.சிவகுமார், மதுரை: எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 2 மாதங்களாகிறது. நான் சூடான உணவை எடுத்துக் கொள்ளலாமா?

இதயத்தில் இருக்கும் அடைத்த ரத்தநாளங்களுக்கு மாற்றாக, நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ, ரத்தநாளங்களை எடுத்து இதயத்தில் பொருத்தும் அறுவை சிகிச்சைக்குப் பெயர், 'பைபாஸ் சர்ஜரி!' இதயத்தில் புதிய ரத்தநாளத்தை பொருத்தினாலும், அதிலும் அடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது. எனவே பைபாஸ் சர்ஜரி செய்த பிறகும், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வேளை தவறாமல் மருந்து எடுப்பது, சர்க்கரை, ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மூலம், இதயத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

உணவை பொறுத்தவரை, எண்ணெயை தவிர்ப்பது அவசியம். பொரித்த உணவை அவசியம் தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையின் அளவை நன்கு குறைக்க வேண்டும். சூடான உணவை எடுத்துக் கொள்வதால் எந்தவித பாதிப்பும் வராது. பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பதுதான் அவசியமானது.

* கே. முத்துக்குமார், பரமக்குடி: என் வயது 51. இரு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. சமீபகாலமாக சிறிது தூரம் நடந்தாலே அதிகமாக மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இது எதனால்?

சர்க்கரை நோயாளிகள் சிறிது தூரம் நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்பட்டால், இது இதய நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்பு அதிகம். உடனடியாக இதய டாக்டரிடம் ரத்தப் பரிசோதனை, நெஞ்சக எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில் பரிசோதனைகளை செய்வது முக்கியம். இப்பரிசோதனையின் முடிவில் கோளாறு இருந்தால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவைப்படும். இதில், எந்த இடத்தில் அடைப்பு உள்ளது என்பதை பொறுத்தே சிகிச்சை அமையும்.

* பி. சங்கரபாண்டியன், சிவகங்கை: எனக்கு ஆறு மாதங்களாக இதய நோய் உள்ளது. என் டாக்டர் இதய மாத்திரைகளுடன், வைட்டமின் 'இ' மாத்திரையும் தந்துள்ளார். இதை தொடர்ந்து எடுக்கலாமா?

வைட்டமின் 'இ' மாத்திரையை பொறுத்தவரை, பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, வைட்டமின் 'இ' மாத்திரை எந்தவிதத்திலும், இதயம், ரத்தநாளத்திற்கு பலன்தருவதாக இல்லை என தெரிய வந்துள்ளது. வைட்டமின் 'இ' மாத்திரையில், Alphatocopherol என்ற பொருள் உள்ளது. இதனால் எந்த பலனும் கிடையாது. ஆனால், இயற்கையான உணவில் உள்ள, 'Gammatocopherol' என்பது நன்மையே தருகிறது. இதை 'Good E' என்பர். இது கோதுமை, பச்சை காய்கறிகள், கீரை, நட்ஸ் போன்றவற்றில் அதிகமுள்ளது. எனவே வைட்டமின் மாத்திரையை நீங்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us