உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 25, 2012

அ நிறம் | அளவு
ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து ஆறுமாதம்ஆகிறது. நான் டூவீலர் ஓட்ட இயலுமா?
ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது இதயத்தின் ரத்தநாள அடைப்பை ஆபரேஷன் இன்றி, கால், கைகளில் உள்ள ரத்தநாளங்களின் மூலம், 'கதீட்டர்' என்ற குழாயை இதயம் வரை செலுத்தி, அடைப்பை அகற்றும் சிகிச்சை முறை. இதில், பொதுவாக பலூனை வைத்து அடைப்பை அகற்றிவிட்டு, அதில், 'குtஞுணt' பொருத்தப்படும்.
இதன்பிறகு, ஆறுமாதங்கள் கழித்து எக்கோ பரிசோதனை, டிரெட் மில் பரிசோதனை செய்யப்படும். இவை இரண்டின் முடிவும் நார்மலாக இருந்தால் நீங்கள் தாராளமாக டூவீலர் ஓட்டலாம். டூவீலர் ஓட்டும்போது, 'கிக் ஸ்டார்ட்டர்' உள்ள வாகனமாக இல்லாமல், 'செல்ப் ஸ்டார்ட்டர்' வாகனமாக இருப்பது நல்லது.
