PUBLISHED ON : செப் 23, 2012

பாலுடன் புளிப்பான பழங்களைச் சேர்த்து கூழாகச் செய்து, 'மில்க் ஷேக்' சாப்பிடுவது மிக மிகக் கெடுதல். இதுபோன்ற, முரண்பாடான உணவுகளை, தினசரி உண்பதால், கர்ப்பத்திலுள்ள சிசு, பிறக்கும்போதே வியாதியால் தாக்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகள், தோல் நோய், சுவாச நோயுடன், உணவு ஒவ்வாமை நோயும் சேர்ந்து பிறக்கின்றன.
இரண்டு வயது குமாருக்கு உணவு என்றாலே விஷம் போன்றது! அரிசி, பால், நெய், கோதுமை, பருப்பு வகைகள், பட்டாணி, சுண்டல், கடலை, முட்டை யாவுமே அவனுக்கு ஒவ்வாத உணவு. இவைகளில் ஏதாவது ஒன்று சிறிதளவு உடலில் பட்டாலோ அல்லது உடலுக்குள் சென்றாலோ அது விஷம் போலமாறி உயிரையே பாதிக்கும். இதுபோன்ற ஒரு வியாதி, இந்தியக் குழந்தைகளிடம் காண்பதில்லை.
ஆனால், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், இந்தப் புதிய நோய் பரவலாகத் தோன்றியுள்ளது. அங்கு பிறக்கும் இந்தியர்களின் குழந்தைகளும் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் தடிப்பு?
மேற்கத்திய நாடுகளில் இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லாததால், அவர்கள் ஆயுர்வேத சிகிச்சையை நாடி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், எங்களது வைத்திய சாலையை நாடி வந்த குழந்தைகள், ஆயுர்வேத சிகிச்சையைப் பெற்றுப் பயனுற்றனர்.
இன்று புதுப் புதுவியாதிகள் மக்களைத் தாக்குகின்றன. நோயால் தாக்கப்படும் குழந்தைகள், நாம் நாள்தோறும் உட்கொள்ளும் உணவுகளை, உண்ண இயலாத நிலையில் உள்ளனர்.
உதாரணமாக இரண்டு வயதுள்ள கிருஷ்ணனுக்கு, கோதுமை, ஒவ்வாத உணவு. கோதுமையால் சமைத்த ரொட்டி, பூரி என, எது சாப்பிட்டாலும், வாந்தி, பேதி, உடல் முழுவதும் சிவந்த தடிப்புகள், உதடுகளில் வீக்கம், உடல், முழுவதும் அரிப்பு ஏற்படும்.
இந்த அறிகுறிகள் ஒரு சிறிய பருக்கை அளவு உணவு சாப்பிட்டால், அரை மணி நேரத்திற்குள் அவனைத் தாக்கும். அந்த வீட்டில் கோதுமை சமைத்தாலே, காற்றில் அந்த மாவின் அம்சம் அவன் நுகர்வதால், அவனுக்கு உடல் பாதிக்கப்படும்.பாலும், 'அலர்ஜி'
கோபாலுக்கு இரண்டரை வயது. அவனுக்குப் பால் அதி பயங்கர, 'அலர்ஜியை' உண்டு பண்ணும். ஒரு துளி பால் அவனுள் சென்றால் வாந்தி, பேதி, மூச்சுத்திணறல், உடல் தடிப்பு, உடல் முழுவதும் அரிப்பு கண்கள் சிவந்து, மிகவும் மோசமான உடல் நிலைக்குத் தள்ளப்படுவான். இதைத் தவிர பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, முட்டை, கோதுமை யாவுமே இவனுக்கு ஒவ்வாத உணவுப்பொருட்கள்.
மேற்கத்திய நாடுகளில், பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், இதற்குக் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு மற்றுமொரு காரணம், புதிய உணவு வகைகள் என்றும், சிலர் கூறுகின்றனர்.பாலுடன், புளிப்பு சேர்க்காதீர்கள்
கர்ப்ப காலத்தில் தாயின் உணவுப் பழக்கங்களும், இந்த வியாதிக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். பொதுவாக, பாலுடன் புளிப்பான உணவுகளை சேர்த்து உண்பது. ஒவ்வாத அல்லது விருத்தமான ஒரு உணவுப்பழக்கம்.
தயிருடன் பழங்களைக் கலந்து உண்பது மற்றுமொரு விருத்தமான உணவு. இது போன்ற விருத்தமான உணவுகளை, அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால், அது உடலிலேயே தங்கி, பல வியாதிகளுக்கு அஸ்திவாரம் போடுகிறது. பாலுடன் புளிப்பான பழங்களைச் சேர்த்து கூழாகச் செய்து, 'மில்க் ஷேக்' சாப்பிடுவது மிக மிகக் கெடுதல்.
இது போன்ற, விருத்தமான அல்லது முரண்பாடான உணவுகளை, தினசரி உண்பதால், கர்ப்பத்திலுள்ள சிசு, பிறக்கும் பொழுதே வியாதியால் தாக்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகள், தோல் நோய், சுவாச நோயுடன், உணவு ஒவ்வாமை நோயும் சேர்ந்து பிறக்கின்றன.கபம், வாயு சீற்றம்
ஆயுர்வேத சிகிச்சையின் கண்ணோட்டத்தில், இக்குழந்தைகளுக்கு, கபம், வாதம், பித்தம் ஆகிய மூன்று தோஷங்களின் சீற்றத்தையும், உடலில் காணலாம். முக்கியமாக கபமும், வாயுவும் இந்த நோயில் மிக அதிகமாக சீற்றமடைந்து உடலைத் தாக்குகின்றன.
அலர்ஜி குழந்தைகளில் பலருக்கு சுவாச நோய் சேர்ந்து வருவதால், படிப்படியாக அக்குழந்தைகள் பயன்படுத்தும், 'இன்ஹேலர், ஸ்டிராய்டு, ஆன்டிஹிஸ்டாமின்' போன்ற மருந்துகளைக் குறைத்து, பதிலாக, ஆயுர்வேத மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறு, சில வாரங்களில் அவர்களுக்கு, ஒவ்வாத உணவுகளில், சில முக்கிய உணவுகளை, சிறிய அளவில் ஆயுர்வேத மருந்துகளுடன் இணைத்துக் கொடுத்து, நாளடைவில் உடலில், விஷத்தன்மையை மாற்றி உணவை ஜீரணிக்குமாறு உகந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர் பி.எல்.டி. கிரிஜா
சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்
63, காமராஜ் அவென்யூ முதல் தெரு,
அடையாறு, சென்னை - 20. (044-24414244)
sanjeevanifoundation@gmail.com