தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/செயற்கை கருத்தரித்தலுக்கு தயார் செய்யும் ஆயுர்வேதம்

செயற்கை கருத்தரித்தலுக்கு தயார் செய்யும் ஆயுர்வேதம்

செயற்கை கருத்தரித்தலுக்கு தயார் செய்யும் ஆயுர்வேதம்


PUBLISHED ON : ஆக 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகப்பேறு, மாதவிடாய் தொடர்பான கோளாறுகள், அதிக அளவில் பெண்களை பாதிக்கின்றன. குறிப்பாக, பிசிஓஎஸ்., பிசிஓடி., சதைக்கட்டி, வெள்ளை படுதல், வலியுடன் கூடிய ரத்தப் போக்கு, அதீத ரத்தப் போக்கு, மாதவிடாய் வராமல் இருப்பது, சீரற்ற மாதவிடாய், மேனோபாஸ் சமயத்தில் ஏற்படும் உடல், மனப் பிரச்னைகள், எண்டோமெட்ரியோசிஸ் போன்றவை. இவை அனைத்திற்கும் காரணமாக, மரபியல், ஹார்மோன் மாற்றங்கள் இருந்தாலும், முறையற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன் கோளாறுகள் ஏற்படத் துாண்டுகிறது.

பிசிஓஎஸ்., / பிசிஓடி.,



அதிக அளவில் ஆன்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதால், கரு முட்டை முதிர்ந்து வெளியேறுவதைத் தடுக்கிறது. பதற்றம், மன அழுத்தம், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், முகம், தேவையற்ற இடங்களில் முடி வளர்வது போன்ற உடல் உள்ளுறுப்பு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் அறிகுறிகளாக வெளிப்படும். ஆரம்ப நிலையிலேயே, ரத்த குளுக்கோஸ் அளவு அதிகமாகி, சர்க்கரை கோளாறு போன்று தோன்றும். தைராய்டு பிரச்னையும் மாதவிடாய் கோளாறுகளுக்கு காரணமாக இருக்கலாம்.

பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் டீசிஸ், கருக்குழாயை மட்டும் பாதிக்கும். பிசிஓஎஸ் போன்று சிக்கலானது இல்லை. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை, துரித உணவு, சூரிய ஒளி படாதது, வைட்டமின் டி குறைபாடு, உடற்பயிற்சி இல்லாதது இவையும் காரணங்கள்.

ஆயுர்வேதம்



வாதம், பித்தம், கபம் இவற்றின் அடிப்படையிலானது ஆயுர்வேத சிகிச்சை. தனி நபரின் அறிகுறிகள், பழக்க வழக்கங்கள், கோளாறுக்கான காரணத்தை தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை இருக்கும். வழக்கமாக வரும் தேதியில் இருந்து 10 நாட்கள் தாமதம் ஆனாலும் பிரச்னை இருக்கலாம். ஒரு மாதம் தொடர்ந்து வரவில்லை என்றால், உடனடியாக ஆலோசனை பெறும் போது, பிசிஓடி என்ற நிலைக்கு செல்வதற்கு முன், ஹார்மோன்களில் ஏற்படும் சிறிய மாற்றத்தை எளிதாக சரி செய்து விடலாம்.

தொற்றுகளால் ஏற்படும் வெள்ளை படுதல், சதைக்கட்டி, இரண்டு நாட்கள் அதிக வலியுடன் இருந்து, அதன் பின் ஏற்படும் ரத்தப் போக்கிற்கும் குறிப்பிட்ட ஹார்மோன் சுரப்பு குறைவாக இருப்பது காரணம். கருப்பை சுருங்கி, விரியும் தன்மையை குறைக்கவும், சதைக் கட்டி சுருங்கவும் மருந்துகள் உள்ளன.

எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கருப்பையின் வெளிச்சுவர் அதீத வளர்ச்சியால், மாதவிடாய் நேரங்களில் மட்டுமல்ல; எந்த சமயத்திலும் தாங்க முடியாத வலி வரலாம். இதற்கு நவீன மருத்துவத்தில் சிகிச்சை கிடையாது. இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த மூலிகை மருந்துகள் உள்ளன.

மேனோபாஸ் சமயத்தில் ஏற்படும் உடல் வெப்ப உணர்வு, மன நிலையில் மாற்றம், அதீத ரத்தப் போக்கை நிர்வகிக்க, தொடர்ந்து நான்கு மாதங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்தால், இயல்பாக மேனோபாசை சமாளிக்கலாம்.

பஞ்ச கர்மா



ஐந்து விதமான சிகிச்சை முறைகள் சேர்ந்தது. சிகிச்சையின் தன்மை, தரப்படும் மருந்துகள், நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு ரத்தப் போக்கு குறைவாக இருக்கும். ஆனால் நொடிக்கு நொடி மனநிலை மாறும். இவர்களுக்கு கல்யாண கிருதம் போன்ற சில நெய் மருந்துகள் தேவைப்படும்.

மனநிலையை சமமாக கொண்டு வருவது தான் இவர்களுக்கு முக்கியம். சிலருக்கு அப்யங்கம் செய்தாலே உடல் முழுதும் ரத்த ஓட்டம் சீராகி, நல்ல பலன் தரும். பிரச்னைக்கு தகுந்த சரியான எண்ணெய் பயன்படுத்தி தரப்படும்.

ஸ்ரோதாரா சிகிச்சையும் நல்ல பலன் அளிக்கும். உடல் பருமனாலும் ஹார்மோன் சீரற்ற செயல்பாடு வரலாம். பஞ்சகர்மா பலன் தரும். கரு குழாயில் ஏற்படும் அடைப்பை குறைப்பதற்கும் பஞ்சகர்மா பயன்படும்.

ஐவிஎப்



மாதவிடாய் பிரச்னைகள் எதுவானாலும் கரு முட்டையின் வளர்ச்சி பாதிப்பதால், இயல்பாக கருத்தரிக்க இயலாது.

பஞ்சகர்மா சிகிச்சையில் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி, செயற்கை கருத்தரித்தலுக்கு முழுமையாக மன, உடலளவில் தயார் செய்தபின் முயற்சித்தால் கரு சுலபமாக தங்கும். ஆயுர்வேத சிகிச்சைக்கு பின், 'ஐவிஎப்' செய்யும் போது, ஆரோக்கியமான முட்டை உற்பத்தியாகி, இயல்பாக கருத்தரிக்க வைக்கலாம்.

டாக்டர் தீபா ஜெயராம்,ஆயுர்வேத மருத்துவர், சென்னை 044 - 42146525, 98413 73458

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us