தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கூகுள் சொல்வதை தெளிவுபடுத்துவதே என் வேலை

கூகுள் சொல்வதை தெளிவுபடுத்துவதே என் வேலை

கூகுள் சொல்வதை தெளிவுபடுத்துவதே என் வேலை


PUBLISHED ON : ஆக 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடை காலத்தில் ஒரு விதமான உணவுகளை சாப்பிட்டு இருப்போம். அதுவே மழை, குளிர் என்றால் வேறு வகை உணவுகளை சாப்பிடுவோம். இந்த மாற்றம் நம் செரிமான மண்டலத்தை பாதிப்பதை போன்று, வாழ்க்கை முறை மாற்றங்களும் செரிமான மண்டலத்தை அதிக அளவில் பாதிக்கின்றன.

நம் மரபணுவிற்கு அவசியம் இல்லாத உணவுகள், நேரம் தவறி சாப்பிடுவது, பல மணி நேரம் சாப்பிடாமல் இருந்து, ஒரு நாளுக்கு தேவையான உணவு மொத்தத்தையும் ஒரே வேளையில் சாப்பிடுவது, துரித உணவுகள் என்று எல்லா கெட்ட பழக்கங்களும் அதிக அளவில், வாழ்க்கை முறை மாற்ற உடல் கோளாறுகள் ஏற்பட காரணங்கள்.

வெளிநாடுகளில் மட்டுமே இருந்த பல நோய்களை நம் நாட்டிலும் தற்போது பார்க்க முடிகிறது. குறிப்பாக பித்தப்பை கற்கள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் நான் மருத்துவ மாணவனாக இருந்த போது, இந்த அளவு கிடையாது. தற்போது மாதத்தில் 20 - 30 பேருக்கு பித்தப்பை கற்களை நீக்குகிறேன்.

நம்முடைய வாழ்க்கை முறையில் வாழாமல், மேற்கத்திய நபர்களை போன்று வாழ ஆரம்பித்து விட்டோம். பிரச்னை வந்த பின், முதலில் கூகுள் டாக்டரிடம் அரைகுறையாக படித்துவிட்டு தான், எங்களிடம் வந்து, கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். கூகுள் சொல்வதை தான் நம்புகின்றனர். இதற்கு பதில் சொல்வதும் தினசரி வேலையாகி விட்டது.

டாக்டர் கபாலி நீலமேகம், செரிமான மண்டல சிறப்பு மருத்துவர், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us