'பேக்கரி மற்றும் துரித உணவுகளால் உடல் பருமன் மட்டுமே அதிகரிக்கும்'
'பேக்கரி மற்றும் துரித உணவுகளால் உடல் பருமன் மட்டுமே அதிகரிக்கும்'
PUBLISHED ON : நவ 22, 2019

பொதுவான உடல்பலவீனத்திற்கு காரணம்?
தற்போதைய தலைமுறையினருக்கு, எல்லாமேஅவசரம். அவசர உலகத்தில் வாழும் இவர்களுக்கு, தங்களை முறையாககவனிக்கவே நேரம் இருப்பதில்லை.தரமான உணவும் சாப்பிடுவதில்லை; போதுமான அளவும் எடுத்துக் கொள்வதில்லை.துாங்கும் நேரத்தை விடவும், மொபைலில் செலவிடும் நேரம் அதிகம். மன அழுத்தம் என்பது, இன்று வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறி விட்டது. துரித, பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் சார்ந்து இருக்கின்றனர்.
உடல் பருமன், பொதுவான பலவீனம், தலைமுடி உதிர்வது, தோல் வறட்சி, அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவது, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு, இது தான் காரணம்.
இதற்கான தீர்வு?
சரியான நேரத்திற்கு, சமச்சீரான உணவை சாப்பிடுவது முக்கியம். காலை, மதியம், இரவு உணவை, எந்த நேரத்தில் சாப்பிட பழகியிருக்கிறோமோ, அந்த நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.காலை உணவை தவிர்ப்பது, மதிய உணவை தாமதமாக சாப்பிடுவது, பார்ட்டி, 'கெட் டு கெதர்' என, நடு இரவில் உண்பது, இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். 6 - 8 மணி நேரம் ஆழ்ந்த துாக்கம், ஒரு நாளைக்கு, 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். நம் உடலின் தேவைக்கு ஏற்ற அளவு, உணவுசாப்பிட வேண்டும்.
சமச்சீர் உணவு என்பது என்ன?
நம் உணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் என்று, அனைத்து சத்துகளும் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் - முழு தானியங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உள்ளது. இவையும், உள்ளூரில் விளைவித்ததாக இருப்பது நல்லது.
புரதம் - நம் நாட்டில் புரத சத்திற்கு, முக்கியத்துவம் தருவதே இல்லை. ஒருவரின் உடல் எடையில், 1 கிலோவிற்கு, 1 கிராம் என்ற அளவில், புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். 50 கிலோ உடல் எடை இருப்பவர், 50 கிராம் புரதம், தினமும் சாப்பிட வேண்டியது அவசியம்.
இதில், 50 சதவீதம், பால், பால் பொருட்கள், வறுத்த வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ், இறைச்சி, மீன் போன்றவற்றில் இருந்து கிடைக்கும், முதல் நிலை புரதமாக இருக்க வேண்டும்.மீதியுள்ள, 50 சதவீதம், இரண்டாம் நிலை புரதமான, பருப்பு வகைகளை சாப்பிடலாம். எந்த உடல் பிரச்னையும் இல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்கள், எல்லாநட்சும் சேர்த்து, தினமும், 100 கிராம் சாப்பிடலாம்.
கொழுப்பு சத்து எந்த அளவு இருக்க வேண்டும்?
நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் கலோரியில், 20 சதவீதம், கொழுப்பில் இருந்து கிடைக்க வேண்டும். கொழுப்பு நம் உடலுக்கு தேவையானது.சமையல் எண்ணெய், நெய் இவற்றில் இருந்தே, தேவையான கொழுப்பு கிடைத்து விடும். சைவ உணவுசாப்பிடுபவர்கள், 5 - 10 கிராம் நெய்யை, தினமும்சாப்பிடலாம்.வைட்டமின் - 'ஏ' தாதுக்கள், வானவில்லின் ஏழு நிறங்களிலும் இருக்கும் காய்கறி, பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். பச்சை காய்கறிகள், மஞ்சள் நிற பழங்கள், சிவப்பு நிற பழங்கள் என தினமும், 500 கிராம் அளவிற்கு, அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இவை, நோய் எதிர்ப்புசக்தியை அதிகமாக்கும்.உடலின் அனைத்து செயல்பாடுகளும் திறம்பட நடக்க, வைட்டமின்கள், தாதுக்கள் உதவுவதால், இவற்றை, 'சுமை தாங்கிகள்' என்று சொல்லுவோம். இந்த சத்துகள் தேவையான அளவு இல்லாவிட்டால், நாம் சாப்பிடும் மற்ற சத்துகளும்,உடம்பில் போதுமான அளவு சேராது.
பதப்படுத்தப்பட்ட உணவில், இந்தசத்துகள் உள்ளதே?
பேக்கரியில் தயாரிக்கப்படும், மைதா, சர்க்கரை அதிகம் இருக்கும் உணவில், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு இருக்கிறது. 'டயட்' என்றஅறிவிப்புடன், 'கார்பனேட்டட்' பானங்கள் இருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளில் இருக்கும், கார்போ ஹைட்ரேட் சத்தில், வெறும் கலோரி மட்டுமே இருக்கும். இதை, 'எம்ட்டி கலோரி' என்று சொல்லுவோம். இதைசாப்பிடுவதால், உடல்பருமன் மட்டுமேஅதிகரிக்கும்.
யாமினி பிரகாஷ்
ஊட்டச்சத்து நிபுணர்
94865 93999
