PUBLISHED ON : மே 18, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் உடல் பிரச்னைகள் பற்றி நிறைய இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. விளைவு, உப்பும், சர்க்கரையும் தேவையற்ற கொழுப்பும் உடலில் சேர்ந்து விடுகின்றன.
காபியில் சிறிது பட்டை தூளை சேர்த்துக் கொண்டால், காபியின் மணம் தூக்கலாக இருப்பதோடு அதிக சர்க்கரை சேர்க்காமலேயே காபியின் சுவை, அதன் பிரத்யேக மணம் இருக்கும்.
ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் பட்டை உதவும்.
முழு கோதுமையில் செய்த பிரெட், உமி நீக்கப்படாத அரிசி, சிறுதானியங்கள், பாஸ்தா இவைகளில் தேவையான
கார்போஹைட்ரேட், நுண்ணுாட்டச் சத்துக்கள் கிடைக்கும்.
உணவில் மீன், சிக்கன், மட்டன் போன்றவற்றை
பிரதானமாக, அரிசி சாதம் மிகக் குறைவாக எடுத்துக் கொண்டால், புரதம் அதிகம் கிடைப்பதோடு, வயிறு கனமாக இல்லாமல் எப்போதும் லேசாக உணர முடியும்.
டாக்டர் மீனாட்சி,டயட்டீஷியன், சென்னை

