கடந்த ஒராண்டாக எனக்கு வறட்டு இருமல் இருக்கிறது. எப்போது எல்லாம் நான் மன அழுத்தம் அடைகிறேனோ, அந்த சமயங்களில், இந்த வறட்டு இருமல் அதிகமாக உள்ளது. இதற்காக சில ஆங்கில மருந்துகளையும் சமயங்களில் ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிடுகிறேன். ஆனாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மனப்பதற்றத்திற்கும் இருமலுக்கும் தொடர்பு இருக்கிறதா?
அமுதா, திருச்சி
வறட்டு இருமலுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருப்பதாக, இதுவரை எந்த மருத்துவ ஆய்வும் உறுதி செய்யவில்லை. ஆனால், ஸ்ட்ரெஸ் அல்லது டென்ஷன் வரும்போது, காபி, டீ அல்லது பழச்சாறு, சமயங்களில் சிகரெட் போன்ற பழக்கத்தால் மன அழுத்தத்தில் இருந்தது, தற்காலிக தீர்வு தருவதாக நம்பி, நீங்கள் பயன்படுத்தினால், இதில் ஏதாவது ஒன்று, உங்களின் வறட்டு இருமலை அதிகப்படுத்தலாம். காபி அல்லது பழச்சாறில் உள்ள சர்க்கரை இருமலை அதிகப்படுத்தலாம். இருமலுக்கு டாக்டர் எழுதித் தரும், எந்த மருந்தும் குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வு தரும். ஆனால் உங்கள் விஷயத்தை பொறுத்தவரை, 'சைக்கோ சோமாடிக்' எனப்படும் மனப் பிரச்னையினால் இருமல் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது. அதாவது, இதனால் தான் எனக்கு வறட்டு இருமல் இருக்கிறதோ என்று, உள் மனதில் பயம், நம்பிக்கை உள்ளது. ஒரு விஷயத்தைப் தெரிந்து கொள்ளுங்கள், சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றை தானே சரி செய்யும் தன்மை, நம் உடலுக்கு உண்டு. இருமல் அதற்கான ஒரு வழிதான்.
டீன், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வீணா, சென்னை
பசியின்மைக்கும், ஸ்ட்ரெஸ்சிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது, வயிற்றில் ஜீரண அமிலம் சுரக்கிறது. ஏற்கனவே உங்களுக்கு வாயுத் தொல்லை, அல்சர் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்தால், இந்த ஸ்ட்ரெஸ்சினால் சுரக்கும் அமிலமும் சேர்ந்து நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். மன அழுத்தம், மனப் பதற்றம் வந்தால், சிலருக்கு சிக்காது, சிலர் அதிகமாக சாப்பிடுவர். உதாரணமாக, இப்போது தேர்வு முடிவுகளோ அல்லது நாம் அதிகமாக எதிர்பார்க்கும் ஏதோ ஒன்றின் முடிவைத் தெரிந்து கொள்ளும் நாள் நெருங்குகிறது என்றால், சிலர் அந்த மனப்பதற்றத்தில் அதிகமாக சாப்பிடுவர். சிலர், பல நாட்கள் பசியில்லாமல், சரியாக சாப்பிடாமல் இருப்பர். மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தில், அதிகமாக ப்பிட வேண்டும் என்ற உணர்வு அல்லது சாப்பிடமே இருக்கும் எண்ணம் ஸ்டரெஸ்சினால் ஏற்படுகிறது.
டாக்டர் ஆர்.சுந்தர்ராமன்
உடல், இரப்பை சிறப்பு மருத்துவர், சென்னை.

