sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மன கோளாறை உறுதி செய்யும் ரத்த பரிசோதனை

மன கோளாறை உறுதி செய்யும் ரத்த பரிசோதனை

மன கோளாறை உறுதி செய்யும் ரத்த பரிசோதனை


PUBLISHED ON : நவ 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பை - போலார்' எனப்படும் மன அழுத்தத்துடன் கூடிய மன கொந்தளிப்பை, ரத்த் பரிசோதனை வாயிலாக சுலபமாக கண்டறியலாம் என்று புதிய ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

துாக்கமின்மை, உடல் எடை குறைவது, நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணம், எதிர்மறை எண்ணங்கள், நம்பிக்கையின்மை, காரணம் இல்லாமல் வரும் அழுகை உட்பட பல அறிகுறிகள் தீவிர மன அழுத்தத்திற்கும் பை - போலார் கோளாறுக்கும் பெரும்பாலும் பொதுவானதாக இருக்கும். இத்துடன் சேர்த்து, சில நேரங்களில் அதீத மன கிளர்ச்சி, உற்சாகத்துடன் படபடவென்று வெறித்தனமாக செயல்களை செய்வது, சில நேரங்களில், சோகமாக, என்ன செய்வது என்று தெரியாமல் பித்து பிடித்தது போல இருப்பது பை - போலார் கோளாறின் அறிகுறி. ஆனால் இரண்டிற்கும் சிகிச்சை வேறுபடும். இந்த வேறுபாட்டை உணராமல், மன அழுத்தத்திற்கான மருந்துகள் தான் பொதுவாகத் தரப்படுகின்றன.

கடந்த 2018 - 2020 ஆண்டுகளில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஆய்வில், ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தீவிர மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறும் 3,000 பேர் பங்கு பெற்றனர். அவரிகளின் மனநலத்தை அறிய 'ஆன்லைன' வாயிலாக, 600 கேள்விகள் கேட்கப்ட்டன. இதில் தற்போதைய மனநிலை, மன உணர்வுகள், பொதுவான மன பதட்டம், மன கிளர்ச்சி உண்டாகும் தருணங்கள், குடும்ப பின்னனி உடல், மன ரீதியில் சந்தித்த பலாத்காரம் குறித்த கேள்விகள் இடம் பெற்றன.

பங்கு பெற்றவர்களில, 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஸ்பெக்ட்ரோமெட்ரி என்ற நவீன கருவியின் உதவியுடன் ரத்த செல்களின் உள்ளே உள்ள 600க்கும் அதிகமான வேறுபட்ட என்சைம்கள், மூலக்கூறுகளில், எந்த மாதிரி மாற்றம் ஏற்பட்டதால் பை - போலார் கோளாறு வரும் சாத்தியம் உள்ளது என்பது தெளிவாக புரிந்தது. ஆன்லைன் மதிப்பீட்டடன் ரத்த பரிசோதனை சேரும் போது, பை-போலார் இருப்பதை சுலபமாக உறுதி செய்ய முடிகிறது.

-கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us