sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/இறுகிய தோள்களை தளர்வடைய செய்யும் வழிகள்

இறுகிய தோள்களை தளர்வடைய செய்யும் வழிகள்

இறுகிய தோள்களை தளர்வடைய செய்யும் வழிகள்


PUBLISHED ON : அக் 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வலிமை மிகுந்த தோள்பட்டையில் வலி வரும் போது, உடம்பில் உள்ள மொத்த பலத்தையும் இழந்துவிட்டது போல் உணரச் செய்யும். இறுக்கமான தோள்பட்டை எனப்படும், 'ப்ரோசன் ஷோல்டர்' பலருக்கும் பிரச்னையாக இருக்கிறது.

தோள்பட்டை எலும்பைச் சுற்றி உறை போன்ற அமைப்பு உள்ளது. தசைகளும், தசைநார்களும் அதிகமுள்ள இப்பகுதியில் வீக்கம், அழற்சியால் தோள்பட்டையில் இறுக்கம் ஏற்பட்டு வலியை உண்டாக்கும், முழங்கையை தலைக்கு மேல் உயர்த்த முடியாத நிலையும், எந்தப் பக்கம் இறுக்கம் இருக்கிறதோ, அந்தப் பக்கம் படுக்கும் போது கடுமையான வலியும் ஏற்படும்.

இறுக்கமான தோள்பட்டையின் பாதிப்பை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும், கவனிக்காது போனால், மற்றொரு தோள்பட்டைக்கும் இறுக்கம் பரவும் வாய்ப்பு உண்டு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டையில் இறுக்கம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வலி, இறுக்கம் காரணமாக உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால், உளவியல் ரீதியான சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் தோள்பட்டை இறுக்கத்தை பிசியோதெரபி மூலம் சிறந்த தீர்வை பெற முடியும். தேவைப்பட்டால், 'ஆர்த்ரோஸ்கோபி சர்ஜரி' என்ற நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்தவும் முடியும்.

* அதிக நேரம் கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடந்து வருவது அவசியம். அத்துடன் தோள்பட்டைக்கு ஏற்றவாறான முதுகு பகுதி கொண்ட நாற்காலியை பயன்படுத்த வேண்டும்

* நடைபயிற்சி செய்யும் போது, கைகளை முன் பின்னாக சுழற்றியவாறு நடக்கலாம். இதனால், தோள்பட்டைக்கு தேவையான பயிற்சி கிடைக்கும்

* யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, சூரிய நமஸ்காரம் செய்யும் போது, தோள்பட்டைக்கு தேவையான பயிற்சி கிடைக்கிறது

* வீட்டில் இருக்கும் போது, 'வால் வாக்கிங்' எனும் எளிய உடற்பயிற்சி செய்யலாம். சுவர் பக்கம் திரும்பி நின்று கொண்டு, இரண்டு கைகளையும் சுவரின் மீது அழுத்தமாக வைத்து, கால்களை கீழிருந்து மேலாக துாக்கி நடப்பது போல் செய்ய வேண்டும். இப்பயிற்சியை துவக்கத்தில் சில முறை செய்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இதனால், தோள்பட்டை இறுக்கத்திலிருந்து முழுமையான நிவாரணம் பெற முடியும்.



எஸ்.சசிகலா,

பிசியோதெரபிஸ்ட்90808 22270

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us