தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பார்வை பாதிப்பை ஏற்படுத்தும் நீல வெளிச்சம்!

பார்வை பாதிப்பை ஏற்படுத்தும் நீல வெளிச்சம்!

பார்வை பாதிப்பை ஏற்படுத்தும் நீல வெளிச்சம்!


PUBLISHED ON : மார் 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கை எட்டும் துாரத்தில் இருந்த இரவு விளக்கை எரிய விட்டு, பாத்ரூம் செல்வதற்காக இரவில் எழுந்த மஞ்சுவிற்கு, பல வினாடிகள் எதுவுமே தெரியவில்லை. கண்களை கசக்கி, சற்றே பதற்றத்துடன் பார்த்தார்... கண்கள் வெளிச்சத்திற்கு பழகவில்லை என்று நினைத்து, இறுக கண்களை மூடித் திறந்தார்; பிரச்னை இல்லை என்று தோன்றியது.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில், இரவில் பாத்ரூம் செல்ல எழுந்தபோதெல்லாம், சில வினாடிகள் பார்வை தெரியவில்லை; பயத்துடன் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார்.

பிம்பங்களைப் பார்க்கும் போது, அவை கறுப்பு, சாம்பல் நிற புள்ளிகளாக தெரிவதாகவும், அவ்வப்போது மின்னல் போல கண்களில் ஒளி வெட்டுவதாகவும் கூறினார். தேவையான பரிசோதனைகளை செய்த போது, நரம்பு தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லை என்று உறுதியானது. மூளை நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் அவரிடம் இருந்தது.

தொடர்ந்து, 18 மாதங்களாக பிரச்னை உள்ளது. அழகு கலை நிபுணராக பணி செய்தவர், தன் சிறப்பு குழந்தையை கவனிப்பதற்காக வேலையை விட்டு விட்டார். அதன்பின், தினமும் பகலில் பல மணி நேரம், இரவில் விளக்கை அணைத்து விட்டு, குறைந்தது இரண்டு மணி நேரம், 'ஸ்மார்ட் போன்' பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது.

அவருக்கு வந்திருப்பது, 'ஸ்மார்ட் போன் விஷன் சிண்ட்ரோம்' என்பது உறுதியாகி விட்டது. தொடர்ந்து பல மணி நேரம், 'கம்ப்யூட்டர், டேப்லெட், ஸ்மார்ட் போன், லேப்டாப்' பார்ப்பதால், கண்களில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

அவரின் தினசரி நடவடிக்கைகளை கேட்டதுமே, பிரச்னைக்கான காரணம் புரிந்து விட்டது. எனவே, 'பெரிதாக எந்த சிகிச்சையும், மாத்திரைகளும் வேண்டாம். முடிந்த வரை மொபைல் போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்' என்றேன்; 'இனி அவசியம் இல்லாமல் போனைத் தொட மாட்டேன்' என்றார்.

ஒரு மாதத்திலேயே நல்ல முன்னேற்றம்; இப்போது முழுமையாக சரியாகி விட்டது.

மின்னணு சாதனங்களை சார்ந்து தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டாலும், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை தரையில் இருந்து கண்களை விலக்கி, 20 அடி துாரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.

இரவு நேரங்களில் விளக்கை அணைத்து விட்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு, பெரும்பாலும் இப்பிரச்னை வருகிறது. அதிலிருந்து வரும் ஊதா நிற வெளிச்சம் விழித்திரையை வெகுவாக பாதிக்கும்.

கிண்டில் பயன்படுத்தி வாசிப்பவர்களுக்கும் இதே பிரச்னை வரும்.



டாக்டர் சுதிர் குமார்,

நரம்பியல் மருத்துவர்,

அப்பல்லோ மருத்துவமனை, ஹைதராபாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us