PUBLISHED ON : அக் 03, 2021

வறட்சியான கண்கள், 'கேட்ராக்ட்' - கண்புரை போன்ற பல வகையான கண் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன.
உலக சுகாதார மையத்தின் கணிப்பின்படி, எளிதாக தவிர்க்க முடிகிற கண் பிரச்னைகளால் ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர்.
பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி உட்பட உலர் 'நட்ஸ்', பூசணி, வெள்ளரி போன்ற விதைகள், மீன் போன்றவற்றில் உள்ள விட்டமின் ஏ, சி, இ, போன்ற சில விட்டமின்கள், உள்ளிருந்து கண்களுக்கு போஷாக்கு தருபவை. தினசரி உணவில் சேர்க்கும் போது, கண் பிரச்னைகளை தவிர்க்க முடியும்; பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பச்சைக் காய்கறிகள், கீரைகளில் உள்ள விட்டமின்கள், 'பீட்டா கரோட்டின்' ஆகியவை, சூரியனில் இருந்து வெளிப்படும், 'அல்ட்ரா வயலெட்' - புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கும். தேவையான அளவு நீர் அருந்துவது, உடலுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் நல்லது.
உடல் பருமன்
அதிக உடல் எடை, கண்களின் உட்புறம் அதிக அழுத்தத்தைக் கொடுத்து, கண்களை பாதிக்கும். சிகரெட் பழக்கம், மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக கண் கோளாறுகளைத் தரும்.கண்களுக்கு ஓய்வு மிக அவசியம்.
ஆதாரம்: சென்டர் பார் டிசீஸ் கன்ட்ரோல் அண்டு பிரிவென்ஷன்

