தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அனைத்து முதுகு வலிக்கும் அறுவை சிகிச்சை தேவை இல்லை!

அனைத்து முதுகு வலிக்கும் அறுவை சிகிச்சை தேவை இல்லை!

அனைத்து முதுகு வலிக்கும் அறுவை சிகிச்சை தேவை இல்லை!


PUBLISHED ON : அக் 03, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகு தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் முதுகு வலியால், அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. 60 சதவீத வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் முதுகு வலியால் அனைவருமே அவதிப்படுவதாக ஆய்வு கூறுகிறது. முப்பது வயதிற்கு பின் முதுகு வலி வருகிறது.

காயம், அதிர்ச்சி, உடல் பருமன், ஒரே நிலையில் நீண்ட நேரம் உட்காருவது, அதிக நேர பயணம், மன அழுத்தம், வேலையில் அதிருப்தி, கடுமையான உடற்பயிற்சி, சமூக, பொருளாதார நிலை ஆகியவற்றால் முதுகு வலி ஏற்படுகிறது.

முதுகு தண்டின் 'டிஸ்க்' இறக்கம், வெரிகோஸ் - நரம்பு சுருங்குதல், முதுகெலும்பு உறுதியற்ற தன்மை, எலும்பு முறிவு, எலும்பு சிதைவு, கீல்வாதம், அரிதான தொற்றுகள், புற்றுநோய் ஆகியவற்றின காரணமாக, முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படலாம்.

தீவிர வலி, வெறும் காலுடன் நடக்கும்போது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு, நீண்ட நாள் படுக்கையில் இருப்பதால் வரும் முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை.

முதுகு வலி, கால் வலிக்கு முறையான மருத்துவ சிகிச்சை, முதுகு தண்டை வலுப்படுத்த இரண்டு மாதங்கள் 'பிசியோதெரபி', சில வாரங்கள் ஓய்வு எடுத்தால் போதும். அதன் பின் முதுகு வலியின் காரணத்தை அறிய, 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' உதவுகிறது.

முதுகு தண்டை வலுப்படுத்தும் பயிற்சிகள், வலி குறைவதற்கான முக்கிய சிகிச்சை. அடிவயிற்று தசைகள், முதுகு தசைகள், கால்களின் தசைகளில் வலிமை இல்லாத காரணத்தாலும் முதுகு வலி வரலாம். எனவே, உடற்பயிற்சியால் தசைகளை வலுப்படுத்த வேண்டும்.

அனைத்து வித முதுகு வலியையும், உடற்பயிற்சிகள் மூலம் 90 சதவீதம் குணப்படுத்தலாம்; அறுவை சிகிச்சை தேவை இல்லை. முதுகு வலி இருந்தால், ஆறு வாரங்களுக்கு வலி நிவாரண மருந்துகள், முதுகை வலிமைப்படுத்தும் பயிற்சிகள் செய்த பின்னும் தொடர்ந்து வலி இருந்தால், 'ஸ்டிராய்டு' ஊசி போடுவதால் வலியைக் குறைக்கலாம்.

இதன் பின்பும் வலி இருந்தால் மட்டும், அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம். முதுகெலும்பு பலவீனம், கட்டி, கால்களில் பலவீனம், மலக்குடல் பிரச்னை, சிறுநீர், மலம் கட்டுப்படுத்த இயலாமை, ஆசனவாயில் உணர்ச்சிகள் இல்லாதது போன்ற அறிகுறிகள் இருந்தால், முதுகெலும்பு முறிவு ஏற்பட்டால் மட்டும் அறுவை சிகிச்சை தேவை.



டாக்டர் பிரேம்குமார்,

வலி நிவாரண ஆலோசகர்,

மேதா மருத்துவமனை, சென்னை.

73977 76331

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us